மக்காச்சோளம்

இலைக்கருகல் நோய்

Setosphaeria turcica

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • முதலில் அடிப்புற இலைகளில் சிறிய, நீர் தேங்கியது போன்ற அடையாளங்கள் தோன்றும்.
  • பின்னர் மெதுவாக பரவும் இந்த அடையாளங்கள் சுருட்டு வடிவில் வித்தியாசமான வெளிர் பச்சை நிறத்துடன், நீர் தேங்கியது போன்ற எல்லைகளைக் கொண்ட சிதைவுகளைப் பெற்றிருக்கும்.
  • இந்த சிதைவுகள் பின்பு ஒன்று சேர்ந்து இலைகளின் பெரும்பகுதி, தண்டு ஆகியவற்றினை ஆக்கிரமித்துக்கொள்ளும், இதனால் விரைவாக அழிதல் ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


மக்காச்சோளம்

அறிகுறிகள்

முதலில் அடிப்புற இலைகளில் சிறிய, நீர் தேங்கியது போன்ற அடையாளங்கள் தோன்றும். நோய் வளரும்போது பயிர்களின் மேற்புறத்தில், அவை தாக்கிய அடையாளங்கள் தோன்றும். முதிர்ந்த இலைகளில் இந்த அடையாளங்கள் நீண்ட சுருட்டு வடிவில் வித்தியாசமான வெளிர் பச்சை நிறத்துடன், நீர் தேங்கியது போன்ற எல்லைகளைக் கொண்ட சிதைவுகளைப் பெற்றிருக்கும். இந்த சிதைவுகள் பின்பு ஒன்று சேர்ந்து இலைகளின் பெரும்பகுதி, தண்டு ஆகியவற்றினை ஆக்கிரமித்துவிடும், இதனால் விரைவாக அழிதல் ஏற்படும். காம்பு முனைகள் வளரும்போது, நோய் பாதிப்பு பயிர்களின் மேற்பரப்பிற்கு பரவினால் கடுமையான விளைச்சல் இழப்புகள் (70% வரை) ஏற்படலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டிரைகோடெர்மா ஹார்ஸியனம் அல்லது பாசில்லஸ் சப்டிலிஸ் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்ட உயிரியல் பூஞ்சைக் கொல்லிகளை வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தி நோய்தொற்றின் ஆபத்தைக் குறைக்கலாம். சல்ஃபர் கலவைகளைப் பயன்படுத்துவதும் சிறந்த பலன்களைத் தரும்.

இரசாயன கட்டுப்பாடு

கவனமாக விவசாய நடைமுறைகளுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை பரிந்துரைக்கப்படுகிறது. முன்கூட்டியே பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவது நோயினைக் கட்டுப்படுத்த சிறந்த வழியாகும். மாறாக நோய் அறிகுறிகள் தோன்றும்போது கூட பூஞ்சைக் கொல்லிகளை பயன்படுத்தலாம். கார்பாஃக்ஸின், குளோரோதலோனில் அல்லது மான்கோசெப் போன்றவை கலந்த பொருட்களைப் பயன்படுத்தலாம். விதை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுவதில்லை.

இது எதனால் ஏற்படுகிறது

நோய்க்குக் காரணமான பூஞ்சைகள் மண் அல்லது பயிர்களின் எஞ்சிய பாகங்களில் குளிர்காலத்தில் உயிர்வாழும். மழைப்பொழிவு, இரவுப் பனி, அதிக ஈரப்பதம் மற்றும் மிதமான வெப்பநிலை போன்றவை நோய் பரவ ஏதுவான சூழ்நிலைகள் ஆகும். காற்று அல்லது மழைச் சாரல்களின் மூலம், மண்ணில் இருக்கும் நோய்க் காரணிகள் இளம் சோள பயிர்களின் இலைகளின் அடிப்புறத்திற்கு பரவுகின்றன. மழைக்காலங்கள் மற்றும் சரியான பராமரிப்பு செய்யப்படாத நிலங்களினால் நோய் பிற பயிர்களுக்கும் மற்றும் நிலத்திற்குள்ளும் பரவுகின்றன. இவை வளரும் நிலையில் 18-27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏதுவான வெப்பநிலை ஆகும். அத்துடன் நீண்ட நேர இலை ஈரப்பதம் 6-18 மணி நேரம் இருப்பதும் தேவையாகும். சோளம், இப்பூஞ்சைகளின் மற்றொரு முக்கியமான ஊட்டம் பெறும் பயிராகும்.


தடுப்பு முறைகள்

  • தடுப்பு வகை அல்லது தாங்கும் தன்மை கொண்ட பயிர் வகைகளை வளர்க்கவும்.
  • சமச்சீர் அளவிலான உரமளித்தலை உறுதி செய்யவும் மற்றும் அதிகப்படியான நைட்ரஜன் உரமளித்தலைத் தவிர்க்கவும்.
  • களைச் செடிகள் நிலத்திற்குள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்திருந்தால் வழக்கமாக நீக்கவும்.
  • சோயாபீன்ஸ், பீன்ஸ் அல்லது சூரிய காந்தி போன்ற பயிர்களைக் கொண்டு மறுபயிரிடல் செய்து நோய் பரவுதலைக் குறைக்கலாம்.
  • பயிரின் எஞ்சிய பாகங்களை ஆழமாக உழுது புதைக்கவும், இதனால் மண்ணில் நோய்க்குக் காரணமான காரணிப்பொருள் குறையும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க