அரிசி

நெற்பயிரின் செம்புள்ளி நோய்

Cochliobolus miyabeanus

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இளம் இலைகளில் சாம்பல் கலந்த-வெள்ளை நிற மையப்பகுதியுடன் வட்ட வடிவிலான, பழுப்பு நிற சிதைந்த புள்ளிகள் காணப்படும்.
  • முதிர்ச்சி அடைந்த தாவரங்களில் சிவப்பு நிற ஓரங்கள் தோன்றும்.
  • தண்டுகள் மற்றும் இலைகளின் மஞ்சள் நிறமாகி, வாடிப்போகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

இந்த நோய்க்கு பல்வேறு வகையான அறிகுறிகள் உள்ளன. இருப்பினும்,பக்கக்கன்றுகள் வளரும் நிலையில் வட்டமான அல்லது நீள்வட்டமான பழுப்பு புள்ளிகள் மஞ்சள் நிற ஒளிவட்டத்துடன் இருப்பது, காணக்கூடிய அறிகுறியாகும். இது பெரிதாகும்போது இந்தப் புள்ளிகளுக்கு நடுவே சாம்பல் நிற மையப்பகுதி உருவாகும் மற்றும் சிவப்பு-பழுப்பு நிற ஓரங்கள் தோன்றும். தண்டுகள் நிறமாற்றம் அடைவது மற்றுமொரு அறிகுறியாகும். நோய் பாதிக்கும் என்பது போன்ற சந்தேகத்திற்குரிய பயிர் வகைகளில், சிதைவுகள் 5-14 மிமீ வரை நீளமாகவும், தளர்வுறும் நிலைக்கு பயிரினை மாற்றும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். தடுப்புவகை பயிர் வகைகளில், சிதைவுகள் மஞ்சள் பழுப்பு நிறமாகவும், குண்டூசிதலை போன்ற அளவிலும் இருக்கும். பூக்களை நோய் பாதித்தால், முழுமை பெறாத தானியங்கள் அல்லது பாதிக்கப்பட்ட தானியங்கள் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் மற்றும் தானியங்களின் தரமும் குறையும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விதைகள் சுத்தமானவை என்பதை உறுதி செய்துகொள்ளவும். விதைகளை சூடான நீரில் (53-54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை) சுமார் 10 – 12 நிமிடங்களுக்கு வைத்திருப்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பநீர் சிகிச்சைக்கு முன்னர் சுமார் 8 மணி நேரங்கள் குளிர்ந்த நீரில் விதைகளை வைத்திருப்பது சிறந்த பலன்களை தரும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூஞ்சைக் கொல்லிகளை கொண்டு விதை சிகிச்சைகள் செய்வதன் மூலம் நோய் வருவதை முன்னரே தடுக்க இயலும். (உதாரணம் : இப்ரோடியோன், ப்ரோபிகோனஸோல், அஸாக்ஸிட்ரோபின், டிரைஃப்ளோக்ஸிஸ்ட்ரோபின் போன்றவை ஆகும் )

இது எதனால் ஏற்படுகிறது

கோஹ்லியோபோலஸ் மியாபெனஸ் எனும் பூஞ்சைகளால் இந்நோய் ஏற்படுகிறது. இவை விதைகளில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழும் தன்மை கொண்டவை மற்றும் ஒரு பயிரில் இருந்து மற்றொரு பயிருக்கு காற்று வழியே பரவும் வித்துக்கள் மூலம் பரவுகின்றன. பாதிக்கப்பட்ட பயிர்களின் எஞ்சிய பாகங்கள் நிலத்தில் இருப்பது மற்றும் களைகள் போன்றவை நோய் பரவுவதற்கான வழக்கமான மற்றும் பொதுவான காரணங்களாகும். செம்புள்ளி நோய் பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பாதிக்கும் நோய், ஆனால் நோய்த் தாக்கம் அதிகமாக பக்கக் கன்றுகள் வளரத் தொடங்கும் நிலை முதல் பயிர்கள் முதிர்ச்சியடையும் நிலை வரை இருக்கும். மண் வளத்தினை சரியாக பராமரிக்காத, முக்கியமாக நுண்சத்துக்களை சரியாக பராமரிக்காத நிலத்தில் இந்நோய் ஏற்படும். இந்நோய்க்கு தேவையான கட்டுப்பாட்டினை சிலிக்கான் உரங்களின் மூலம் பெற முடியும்.கால்நடை உரம் மற்றும் இரசாயன உரங்களின் கலவையைப் பயன்படுத்துவது அதன் தீவிரத்தை குறைக்கும். அதிக ஈரப்பதம் (86-100%), நெடுங்காலமாக இலை ஈரமாக இருப்பது மற்றும் அதிக வெப்பநிலை (16-36 டிகிரி செல்சியஸ்) போன்றவை இந்த பூஞ்சைகளுக்கு ஏதுவான சூழ்நிலைகளாகும்.


தடுப்பு முறைகள்

  • கிடைக்கப்பெற்றால், எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை பயன்படுத்தவும்.
  • மண்ணில் சிலிக்கான் அளவு குறைவாக இருந்தால், கால்சியம் சிலிக்கேட் கசடுகளை நடவு செய்வதற்கு முன்பு பயன்படுத்தவும்.
  • முடிந்தவரை, சான்றிதழ் பெற்ற மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற விதைகளைப் பெறவும்.
  • தடுப்பு வகை பயிர்கள் உங்கள் பகுதிகளில் கிடைத்தால், அவற்றினைப் பயிரிடவும்.
  • சரிசமமான சத்துக்கள் வழங்கப்படுவதையும், மண்ணில் வழக்கமான சத்துக்கள் இருப்பதையும் அடிக்கடி கண்காணிக்கவும்.
  • பக்கக் கன்றுகள் வளர ஆரம்பித்ததில் இருந்தே நோய்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை கண்காணிக்கவும்.
  • உங்கள் வயலிலும் அதைச் சுற்றியுள்ள களைகளையும் கட்டுப்படுத்தி அகற்றவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அறுவடைக்குப் பிறகு அவற்றை அப்புறப்படுத்தி எரிப்பதன் மூலம் அழிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க