கரும்பு

கரும்பின் கரிப்பூட்டை நோய்

Sporisorium scitamineum

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கருப்பு சாட்டை போன்ற அமைப்பு தாவரத்தில் வளரும்.
  • தாவரங்களின் வளர்ச்சி குன்றும்.
  • இலைகள் மெல்லிய, கடினமான இலைகளாக மாறும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

கருப்பு சாட்டை போன்ற அமைப்பு கரும்பின் வளரும் பகுதிகளில் இருந்து வெளிப்படும் மற்றும் பெரும்பாலான சமயங்களில் பாதிக்கப்பட்ட கரும்பின் மேல்பகுதியில் இவை வளரத் தொடங்கும். இந்த வளரும் சாட்டை போன்ற அமைப்பு தாவரத்தின் திசுக்கள் மற்றும் பூஞ்சைகளின் திசுக்கள் இரண்டையும் பெற்றிருக்கும். பூஞ்சைகளின் வித்துக்கள் இதன் திசுக்களில் கலந்திருக்கும். அந்த வித்துக்கள் வெளியேற்றப்பட்டதும், வெறும் சாட்டை போன்ற அமைப்பு மட்டுமே எஞ்சியிருக்கும். இவை தவிர பயிரின் வளர்ச்சி குன்றும். இலைகள் மெல்லிய, கடினமான இலைகளாக மாறும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாதிக்கப்பட்ட கரும்புத் தண்டுகளை அகற்றவும் மற்றும் அக்கரும்பின் மீதமுள்ள அனைத்து பகுதிகளையும் அழித்துவிடவும். விதைக்கும் பொருட்களில் எவ்வித நோய் தொற்றும் இல்லை என்பதை உறுதி செய்ய, கரும்புத் துண்டுகளை 52 டிகிரி செல்சியஸ் சூடான நீரில் 30 நிமிடங்கள் மூழ்க வைக்கவும் அல்லது 50 டிகிரி செல்சியஸ் சூடான நீரில் 2 மணிநேரம் மூழ்க வைக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பென்ஸிமிடஸோல் போன்ற பூஞ்சைக் கொல்லிகளை பயிரிடுதலுக்கு முன்பு பயன்படுத்துதல் மூலம் இந்நோய் தாக்குதலைக் குறைக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

நோயினை உண்டாக்கும் பூஞ்சைகளின் வித்துக்கள் காற்று மற்றும் பல வேறுபட்ட பூச்சிகளின் மூலம் பரவுகின்றன. பாதிக்கப்பட்ட கரும்புகளின் தண்டுகளைப் நடுவதற்கு பயன்படுத்துதல் இவை பரவுவதற்கான இன்னொரு வழியாகும். சூடான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகள் நோய் பரவ சாதகமான சூழல்நிலைகள் ஆகும். பல மாதங்களாக எவ்வித அறிகுறிகளையும் வெளியில் தோற்றுவிக்கமாலே பாதிக்கப்பட்ட கரும்பு பயிர்கள் வளரும். இரண்டு அல்லது நான்கு மாதங்களில் (சில சமயங்களில் ஒரு ஆண்டு கூட ஆகலாம்) கரும்பின் வளரும் பகுதிகளில் "சாட்டை" போன்ற அமைப்பு வெளிப்படும்.


தடுப்பு முறைகள்

  • தடுப்பு வகை கொண்ட பயிர்களை பயிரிடவும்.
  • நோய் இல்லாத தாவர பொருட்களை பயன்படுத்தவும்.
  • பெரிய அளவில் பயிர் சுழற்சியை மேற்கொள்ளவும்.
  • விதைப் பெருக்கத்திற்கு வெப்ப சிகிச்சையினைப் பயன்படுத்தவும் (ஈரமான வெப்ப காற்று சிகிச்சை – MHAT – 150 நிமிடங்களுக்கு 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அல்லது 50 டிகிரி செல்சியஸ்க்கு சூடான நீர் சிகிச்சையினை 2 மணி நேரத்திற்கு அளிக்க வேண்டும்).

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க