கோதுமை

மஞ்சள் கோடு துருநோய்

Puccinia striiformis

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கோடுகளாக அமைந்த சிறிய, துருப்பிடித்தது போன்ற கொப்புளங்கள்.
  • தண்டுகளும் உச்சிப்பகுதிகளும் பாதிக்கப்படலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
பார்லிகோதுமை
கோதுமை

கோதுமை

அறிகுறிகள்

பயிர்கள் பாதிக்கப்படும் தன்மையினைப் பொறுத்து நோயின் வீரியம் அமையும். மோசமாக பாதிக்கப்படக்கூடிய பயிர்வகைகளில், இப்பூஞ்சைகள், நரம்புகளுக்கு இணையாகக் குறுகிய கோடுகள் போன்ற அமைப்பில் மிகச்சிறிய, மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறத்திலான (“துரு”) கொப்புளங்களை உருவாக்குகின்றன. இவை விரைவில் ஒன்று சேர்ந்து மற்றும் முழு இலையினையும் விழுங்கும், இது இளம் இலைகளில் முன்னதாகவே தோன்றும். இந்தக் கொப்புளங்கள் (0.5 முதல் 1 மிமீ விட்டம் வரையில் இருக்கும்) சில சமயங்களில் தண்டுகள் மற்றும் தலைப்பகுதிகளிலும் காணப்படலாம். நோயின் பிந்தைய நிலைகளில், நீளமான, சிதைந்த, இலேசான பழுப்புநிறக் கோடுகள் அல்லது காயங்கள் இலைகளில் காணப்படும், இவற்றினை சுற்றி அடிக்கடி துருபோன்ற கொப்புளங்கள் காணப்படும். மோசமான பாதிப்புகளில் பயிரின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படும் மற்றும் திசுக்கள் சேதமடையும். குறைந்த இலைப் பகுதியானது குறைந்த உற்பத்தி திறன், ஒரு பயிரில் குறைவான கதிர்கள், ஒரு கதிரில் குறைவான தானியங்கள் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். மொத்தத்தில், இந்நோய் பாதிப்பினால் மிகவும் மோசமான அளவில் பயிர்ச் சேதமடையும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பல உயிரிப் பூஞ்சைக்கொல்லிகள் சந்தைகளில் கிடைக்கின்றன. பாசில்லஸ் புமிலஸ் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை 7 முதல் 14 நாட்கள் இடைவெளியில் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பலனளிக்கும் மற்றும் இவை தொழில்துறையில் முக்கியமானவர்களால் சந்தைப்படுத்தப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். நோய் தாக்குவதற்கு முன்னதாகவே ஸ்ட்ரோபிலுரின் தொடர்புடைய பூஞ்சைக் கொல்லிகளை இலைவழியே தெளித்தல் முறையில் பயன்படுத்துவது நோய்க்கு எதிராகச் சிறந்த பாதுகாப்பினை அளிக்கும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலத்தில், டிரையஸோல் குடும்பத்துடன் தொடர்புடைய அல்லது இரண்டும் கலந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

புசினியா ஸ்டிரிஃபோர்மிஸ் எனும் பூஞ்சைகளினால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, இவை உயிர்வாழ்வதற்கு, உயிருடன் இருக்கும் பயிர்கள் கட்டாயம் தேவைப்படுகிறது. 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலத்திற்குகூட காற்றின் மூலம் வித்துக்கள் பரவும் மற்றும் பருவகாலத் தொற்றுநோய்களையும் இவை ஏற்படுத்தும். இலைகளின் இயற்கையான துளைகளின் வழியே இப்பூஞ்சைகள் உள்நுழைகின்றன, பின்னர் படிப்படியாக இலைத் திசுக்களில் குடியேறுகின்றன. இந்த நோயானது வளரும் பருவத்தின் ஆரம்பத்தில் ஏற்படுகிறது. பூஞ்சை வளர்ச்சி மற்றும் தொற்றுநோய்க்கான சாதகமான சூழ்நிலைகள் : அதிக உயரம், அதிக ஈரப்பதம் (பனி), மழைப்பொழிவு மற்றும் குளிர்ந்த வெப்பநிலை 7 முதல் 15 டிகிரி செல்சியஸ் போன்றவை ஆகும். வெப்பநிலை தொடர்ச்சியாக 21-23 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருக்கும்போது நோய்த் தொற்று நீங்கிவிடும், ஏனெனில் இந்த வெப்பநிலையில் இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி வெகுவாகப் பாதிக்கப்படும். கோதுமை, பார்லி மற்றும் கம்பு போன்றவை இவற்றின் தாக்கத்திற்குள்ளாகும் மாற்றுப் புரவலன்கள் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • நோய் தடுப்பு வகைப் பயிர்கள் கிடைத்தால் அவற்றைக் கொண்டு பயிர் செய்யவும்.
  • நைட்ரஜன் உரங்களை சரியான அளவில் அளிப்பதை உறுதி செய்யவும், மற்றும் அதிகளவிலான நைட்ரஜன் உரமளித்தலைத் தவிர்க்கவும்.
  • தேவையற்ற களைகள் மற்றும் பயிர்கள் வளர்ந்திருப்பின் அவற்றினைக் கண்காணித்து நீக்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் பயிரின் எஞ்சிய பகுதிகளை ஆழமாக உழுது மற்றும் புதைத்து விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க