கோதுமை

உதிரிக் கரிப்பூட்டை நோய்

Ustilago segetum var. tritici

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பூப் பூக்கும் பருவத்தில் அல்லது அதற்குச் சிறிது முன்னதாக அறிகுறிகள் தென்படும்.
  • பொடிபோன்ற கருப்புத் தானியங்களுடன் கூடிய கருப்புநிறத் தலைப்பகுதி காணப்படும் மற்றும் ஒருவிதமான “இறந்த மீன்” நாற்றம் வரும்.
  • வளரும் தானியங்களுக்குப் பதிலாக பூஞ்சைகளின் வளர்ச்சி இடம்பெறும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கோதுமை

அறிகுறிகள்

பூ பூக்கும் பருவத்தில் அல்லது அதற்குச் சிறிது முன்னதாக அறிகுறிகள் தென்படும் மற்றும் பொடிபோன்ற கருப்புத் தானியங்களுடன் கூடிய கருப்புநிற தலைப்பகுதி காணப்படும் மற்றும் ஒருவிதமான “இறந்த மீன்” நாற்றம் வரும். வளரும் தானியங்களுக்கு பதிலாக பூஞ்சைகளின் வளர்ச்சி இடம்பெறும் மற்றும் பாதிக்கப்பட்ட தலைப்பகுதிகளில் எவ்வித தானியங்களும் இருக்காது. உலகெங்கும் கோதுமை தானியங்கள் வளரும் பகுதிகளில் இது பொதுவாக காணப்படும் நோயாகும். இந்நோயினால் மகசூலில் பாதிப்பு ஏற்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

20-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 4-6 மணி நேரம் வரையில் விதைகளை மூழ்க வைக்க வேண்டும். அதன் பின்னர், 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள சூடான நீரில் சுமார் 2 நிமிடங்கள் அமிழ்த்தி எடுக்க வேண்டும். அடுத்ததாக, விதைகளைப் பிளாஸ்டிக் விரிப்புகளில் விதைகளை வைத்து மற்றும் சூரியஒளியில் மேலும் 4 மணி நேரங்கள் காயவைக்கவேண்டும். விதைத்தலுக்கு முன்னர் இந்த விதைகள் முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும். இந்த சிகிச்சை முறைகளினால் நோய்த் தொற்று ஏற்படுவது குறையும், ஆனால் இது விதைகளின் முளைக்கும் திறனை பாதிக்கக்கூடும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். கார்பாஃக்ஸின் அல்லது டிரையடிமெனோல் போன்ற முறையான பூஞ்சைக்கொல்லிகளால் முளைக்கும் விதைகளுக்கு சிகிச்சையளித்தல் விதைகளுக்குள்ளேயே பூஞ்சைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அல்லது அவற்றை அழித்துவிடும். டிரைடிகோனஸோல், டைஃபெனோகோனஸோல் மற்றும் டெபுகோனஸோல் போன்ற பிற பொருட்கள் கொண்டும் விதைகளுக்கு சிகிச்சையளிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

உஸ்டிலகோ டிரிடிசி எனும் பூஞ்சைகளால் இந்நோய் அறிகுறிகள் ஏற்படுகிறது, இவை பாதிக்கப்பட்ட கோதுமை விதைகளுக்குள் செயலற்றிருக்கும். பயிர்களின் வாழ்க்கைச் சுழற்சியினைப் பொறுத்து இவற்றின் வளர்ச்சி அமையும். பாதிக்கப்பட்ட விதைகள் முளைக்கும்போது, இளம் கோதுமைத் தளிர்களுடன் இணைந்து பூஞ்சைகளும் முளைக்கத் துவங்கும் மற்றும் பூக்களின் திசுக்களில் குடியேறும். பூக்கள் மகரந்தத்தினை வெளியிடுவதற்குப் பதிலாக, பூஞ்சைகளின் வித்துக்களைக் காற்று மூலம் ஆரோக்கியமான பூக்களுக்குப் பரவச் செய்துவிடுகின்றன. அங்கு அவை முளைத்து, மற்றும் புதிய திசுக்களில் குடியேறி, இறுதியாக புதிய விதைகளுக்குள் சென்றுவிடும். பாதிக்கப்பட்ட விதைகளில் பூஞ்சைகள் செயலற்றிருக்கும், ஆனால் பார்ப்பதற்கு விதை ஆரோக்கியமானதாகவே தெரியும். இந்த பாதிக்கப்பட்ட விதைகளை பயிரிடும்போது பூஞ்சைகளின் வாழ்க்கைச் சுழற்சி மறுபடியும் ஆரம்பிக்கும். அறுவடையில் எஞ்சிய பயிர் பகுதிகள், மழை மற்றும் பூச்சிகளினாலும் இவை பரவுகின்றன. அடிக்கடி மழைப்பொழிவு அல்லது பனியுடன் கூடிய ஈரமான வானிலை (60-85% ஒப்பு ஈரப்பதம்) அமைவது மற்றும் வெப்பநிலை 16-22 டிகிரி செல்சியஸாக இருப்பது போன்றவை வித்துக்கள் வேகமாக முளைப்பதற்கு ஏற்ற சூழல்களாகும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான பயிர்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட நோய்களற்ற மூலங்களிடம் இருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • தடுப்புவகைப் பயிர்வகைகள் கிடைத்தால் அவற்றினைப் பயிரிடவும்.
  • வேறு நிலங்களில் பயன்படுத்திய கருவிகள், கையுறைகள் மற்றும் காலணிகளை மறக்காமல் சுத்தம் செய்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க