கோதுமை

கோதுமை இலை துருநோய்

Puccinia triticina

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • அதிக எண்ணிக்கையிலான சிறிய சிவப்பான ஆரஞ்சு முதல் பழுப்பு நிறத்திலான கொப்புளங்கள் இலைகள், இலை உறைகள் மற்றும் தானியங்களின் வெளிப்புற உறைகளில் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்களில், சிறிய இரண்டாம் நிலைப் பருக்கள் மற்றும் வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் நிறப் பிரகாசமான ஒளிவட்டம் முதல் நிலை கொப்புளங்களைச் சுற்றியிருக்கும்.
  • அதிக எதிர்ப்பு திறன் கொண்ட கோதுமை வகைகளில், ஆரஞ்சு நிறக் கொப்புளங்கள் சிறியதாகவும் மற்றும் இவை வெளிறிய அல்லது சிதைந்த பகுதிகளால் சூழப்பட்டு இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கோதுமை

அறிகுறிகள்

கோதுமை இலைத் துருநோய் பொதுவாக கோதுமையில் ஏற்படும் நோய்களுள் ஒன்றாகும். பாதிக்கப்பட்ட பயிர்களைப் பொறுத்து இதன் அறிகுறிகள் அமையும். அதிக எண்ணிக்கையிலான சிறிய சிவப்பான ஆரஞ்சு முதல் பழுப்பு நிறத்திலான கொப்புளங்கள் இலைகளின் இருபுறங்களிலும், இலை உறைகள் மற்றும் தானியங்களின் வெளிப்புற உறைகளில் காணப்படும். அவை சுமார் 1.5 மிமீ விட்டத்துடன், சிறிது உப்பி, வட்டம் முதல் நீள்வட்ட வடிவில் இருக்கும். பாதிக்கப்பட்ட பயிர்களில், சிறிய இரண்டாம் நிலை பருக்கள் மற்றும் வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் நிற பிரகாசமான ஒளிவட்டம் முதல் நிலை கொப்புளங்களைச் சுற்றியிருக்கும். காலப்போக்கில், அந்த வண்ணங்கள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறமாகும். அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட கோதுமை வகைகளில், ஆரஞ்சு நிறக் கொப்புளங்கள் சிறியதாகவும் மற்றும் இவை வெளிறிய அல்லது சிதைந்த பகுதிகளால் சூழப்பட்டும் இருக்கும். நோய்ப் பாதிப்பினால் பயிர்த் திசுக்கள் பாதிக்கப்படும், நீரிழப்பு ஏற்படும் மற்றும் உற்பத்தி குறையும். இந்த அறிகுறிகளில் மலர்கள் மற்றும் தானியங்கள் சுருங்குவது, மகசூல் குறைவது போன்றவையும் அடங்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், புசினியா டிரிடிசினா எனும் இப்பூஞ்சைகளுக்கு எதிராக தற்போது எங்களிடம் எவ்வித மாற்று சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம், இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். ப்ரோபிகோனஸோல் அல்லது டிரையஸோல் கலந்த பூஞ்சைக் கொல்லிகளை இலைவழியே தெளிப்பதன் மூலம் நோய்த் தாக்கத்தினைத் தவிர்க்கலாம். பொருட்களைப் பயன்படுத்தும் முன்பு கவனமாக வழிமுறைகளைப் படித்துவிட்டு பயன்படுத்தவும். பூஞ்சைகளில் எதிர்ப்புத் திறன் உருவாவதை தடுக்கப் பயன்பாட்டு நேரம் மற்றும் அளவுகளைப் பின்பற்றவும்.

இது எதனால் ஏற்படுகிறது

புசினியா டிரிடிசினா எனும் பூஞ்சைகளால் இந்நோய் ஏற்படுகிறது. இது பயிர்த் திசுக்களைத் தாக்கும் ஒருவகை ஒட்டுண்ணி பூஞ்சையாகும். இதன் வாழ்க்கைச் சுழற்சியினை முழுமை பெறச் செய்ய இதற்கு உயிருள்ள கோதுமைப் பயிர்கள் அல்லது மாற்றுப்புரவலன்கள் தேவைப்படும். வித்துக்கள் தனது மூலங்களிடம் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலத்திற்குக் கூட காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டவை. அதிகளவிலான ஈரப்பதம் அல்லது நீண்டகால இலையின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை 10 – 30 டிகிரி செல்சியஸ் (16-22 ° C உகந்ததாக இருக்கும்) வரையிருப்பின் இவை முளைக்கத் தொடங்கும். இந்த சூழ்நிலைகளில், வித்துக்கள் இலைகளில் பட்ட முப்பது நிமிடங்களுக்குள் வளரத் தொடங்கும். அதிக விகிதங்களில் நைட்ரஜன் உரங்களை அளித்தலும் நோய்க்குச் சாதகமாக அமையும். பயிர்களின் இலைகள் அல்லது இலை உறைகளில் அமையும் இயற்கையான துளைகளின் மூலம் இப்பூஞ்சைகள் பயிர்களுக்குள் நுழைகின்றன. பூஞ்சைகள் தனது வாழ்க்கைச் சுழற்சியினை 7 முதல் 8 நாட்களுக்குள் முடித்துக்கொள்கின்றன, இது நிலத்தின் சூழல்களைப் பொறுத்தமையும். தானியக் குடும்பத்தில் புசினியா டிரிடிசினா பூஞ்சைகள் பல்வேறு மாற்றுப் புரவலன்களை கொண்டுள்ளன.


தடுப்பு முறைகள்

  • நிலையான மற்றும் தடுப்புவகை பயிர்கள் கிடைத்தால் அவற்றை வளர்க்கவும்.
  • குளிர்காலக் கோதுமையைத் தாமதமாகவும் மற்றும் கோடைக்காலக் கோதுமையை விரைவாகவும் வழக்கமாக விதைக்கவும்.
  • களத்தினைக் கண்காணித்து தானாக வளர்ந்த தாவரங்களை நீக்கவும்.
  • பயிரிடலின்போது குறைவான பயிர் அடர்த்தி இருப்பதை உறுதிசெய்யவும்.
  • ஆரோக்கியமான பயிர் சுழற்சியினை திட்டமிட்டு மற்றும் செயல்படுத்தவும்.
  • நைட்ரஜன் உரங்களை சரியான அளவில் பயன்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பின்னர் பயிரின் எஞ்சிய பாகங்களை நீக்கி அழித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க