Mycosphaerella
பூஞ்சைக்காளான்
இலையின் இருபுறங்களிலும் வட்டப் புள்ளிகள் தோன்றும். ஆரம்பகால இலைப்புள்ளி நோயால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை இலைகளில் பெரும்பாலும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும் மென்மையான பழுப்பு நிற காயங்கள் மூலம் அறியலாம். தாமதமான இலைப்புள்ளி நோயால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை இலைகளில் கரடு முரடான கரும் பழுப்பு நிறம் அல்லது கருப்பு நிற காயங்களும், அதனைச் சுற்றி சில இடங்களில் ஒளிவட்டம் இருப்பதன் மூலம் அறியலாம். நோயின் தன்மை அதிகரிக்கும்போது நிறம் கருமையாக மாறி அளவில் பெரிதாகும் (10 மி.மீ வரை) மற்றும் இலையின் மேற்புறத்திலும், தண்டு, முளைகள் பகுதிகளிலும் இது தோன்ற ஆரம்பிக்கும். ஆரம்பகால இலைப்புள்ளி நோயில், வெள்ளி முடி போன்ற பூஞ்சைகள் இலையின் மேற்புறத்தில் காணப்படும். சுற்றுப்புறச் சூழ்நிலைகள் அவற்றிற்கு சாதகமாக இருந்தால் இலைகள் உதிரும், தண்டு மற்றும் முளைகள் வலுவிழந்திருக்கும். இலைகள் உதிர்வதால் தாவரங்களும் அதன் உற்பத்தியும் வலுவிழந்து போகும். கதிரடிக்கும் நேரத்தில் நோய் பாதிக்கப்பட்ட முளைகள் வலுவிழப்பதால், அறுவடையின் போது இழப்புகள் அதிகரிக்கும்.
பாக்டீரியா பேசில்லஸ் சர்குலன்ஸ் மற்றும் செர்ரடியா மர்செஸ்சென்ஸ் போன்ற பூஞ்சைக்கு எதிரான பாக்டீரியாவை இலைகளில் பயன்படுத்துவதன் மூலம் தாமதமான இலைப்புள்ளி நோய் ஏற்படுவதை குறைக்க முடியும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். குளோரோதலோனில், டெபுகோனசோல், ப்ரோபிகொனாஜோல் அசாக்ஸிஸ்ட்ரோபின், பைராக்ளோஸ்ட்ரோபின், ஃப்ளொக்ஸாஸ்ட்ரோபின் அல்லது போஸ்கலிட் போன்றவை அடங்கிய பூஞ்சைக் கொல்லிகளை இலைகளில் தெளித்தல் மூலம் இரு நோய்களையும் கட்டுப்படுத்த இயலும். உதாரணமாக, மான்கோஜெப் 3 கிராம் / லி அல்லது குளோரோதலோனில் 3 கிராம் / லி ஆகியவற்றை அறிகுறிகள் முதலில் தோன்ற ஆரம்பித்த பிறகும் மற்றும் தேவைப்பட்டால் 15 நாட்களுக்கு பிறகும் மீண்டும் மீண்டும் தெளிக்கலாம்.
தாமதமான மற்றும் ஆரம்பகால இலைப்புள்ளி நோய் என்னும் இருவேறுபட்ட நோயானது ஒரே விதமான அறிகுறிகளுடன், முறையே அதன் பெயர்களுக்கு ஏற்ப, தாவரங்களின் வெவ்வேறு வளர்நிலைகளில் காணப்படுகிறது. ஆரம்பகால இலைப்புள்ளி நோய் மைகோஸ்பாரெல்லா அராச்சிடிஸ் எனும் பூஞ்சைகளாலும், தாமதமான இலைப்புள்ளி நோய் மைகோஸ்பாரெல்லா பெர்கெலேயி எனும் பூஞ்சைகளாலும் ஏற்படுகிறது. வேர்க்கடலை செடிகள்தான் அறியப்பட்ட ஒரே புரவலனாகும். வருபவற்றிற்கெல்லாம் எளிதில் இடம் கொடுக்கும். முந்தைய வேர்க்கடலை செடிகளின் கழிவுகள் அடுத்து வரும் செடிகளை தாக்குவதற்கு முக்கிய காரணிகளாகும். அதிகப்படியான ஈரப்பதம் (பனி), அதிகப்படியான மழைபொழிவு (அல்லது மேல்நிலை நீர்ப்பாசனம்) மற்றும் வெதுவெதுப்பான சூழ்நிலை (20 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக) நீண்ட காலம் இருக்குமேயேனால் இந்த நோய்கள் விரைவாக பரவத் தொடங்கும். உலகெங்கிலும் தாமதமான மற்றும் ஆரம்பகால இலைப்புள்ளி நோய்கள் நிலக்கடலையை தாக்கும் மிகவும் ஆபத்தான நோய்களாகும். இந்த நோய்கள் தனியாக அல்லது , சேர்ந்து பயிர் பயனாக்கத்தில் அதிகப்படியான பாதிப்பினை ஏற்படுத்தவல்லவை.