சோளம்

தலைக்கரிப் பூட்டை

Sphacelotheca reiliana

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கருப்புநிறத்துகள் போன்ற பூஞ்சைகள் மஞ்சரி முழுவதும் அல்லது பாதியளவு வளர்ந்திருக்கும்.
  • பூங்கொத்துகள் மற்றும் சோளக்காதுகளில் வழக்கத்திற்கு மாறான இலை அமைப்புகள் தென்படும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகள் வட்டமாக அல்லது கண்ணீர்த் துளி வடிவில் மற்றும் முழுவதும் கருப்புநிறத்தூள்களால் நிரப்பப்பட்டிருக்கும்.
  • கடினமான குழாய்த் திசுக்களின் திரிபுகள், வித்துக் கூட்டங்களுடன் சிக்கலான நிலைமையில் கலந்திருக்கும்.
  • பட்டு அல்லது தானியங்கள் சோளக்காதுகளில் இருக்காது.

இதிலும் கூடக் காணப்படும்


சோளம்

அறிகுறிகள்

பயிர் வளர்ச்சியின் பிற்பாதியில், அதாவது சோளத்தட்டு மற்றும் பூக்கள் தோன்றிய உடன் நோயின் முதல் அறிகுறிகள் தோன்றும். கருப்பு நிறத்துகள் போன்ற பூஞ்சைகள் மஞ்சரி முழுவதும் அல்லது பாதியளவு வளர்ந்திருக்கும். மஞ்சரிகள் மற்றும் சோளக்காதுகளில் வழக்கத்திற்கு மாறான இலை அமைப்புகள் தென்படும். பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆரோக்கியமான பகுதிகளைக் காட்டிலும், முற்றிலும் வட்டமாக முழுவதும் கருப்புநிறத்துகள் போன்று காணப்படும். கடினமான குழாய்த் திசுக்களின் திரிபுகள், வித்துக் கூட்டங்களுடன் சிக்கலான நிலையில் கலந்திருக்கும். பட்டு அல்லது தானிய பருப்புகள் பாதிக்கப்பட்ட பயிர்களின் காதுகளில் இருக்காது. அதிகப்படியான கிளைகள் இருப்பது இதன் இரண்டாம்நிலை அறிகுறியாக வரையறுக்கப்படுகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நைட்ரஜன் விகிதங்களுக்கு குறைந்த கார்பனுடன் கூடிய எருவைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த் தாக்கத்தை குறைக்கலாம். பூஞ்சைகளை உண்ணும் வண்டுகள் (பலாக்ரஸ் ஆப்ஸ்குரஸ் மற்றும் லிஸ்டுரோன்கஸ் காருளியஸ்) உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணியாக திகழ்கின்றன. பாசில்லஸ் மெகடேரியம் சாற்றினைக் கொண்டு விதைச் சிகிச்சை செய்வதன் மூலமும் நோய்த்தொற்று ஏற்படுவதைக் குறைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

பயிர்கள் பூஞ்சைகளினால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முறையான பூஞ்சைக் கொல்லிகளைக் (கார்பாஃக்ஸின்) கொண்டு விதைச் சிகிச்சை செய்யவும், ஆனால் குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாட்டினை மட்டுமே வழங்கும். நாற்றுநடும் நிலையில், வரப்புகளுக்குள் மேற்கொள்ளப்படும் பூஞ்சைக்கொல்லிகளுடனான சிகிச்சை சிறந்த பலனளிக்கும், ஆனால் பொருளாதார அடிப்படையில் இது உகந்ததல்ல.

இது எதனால் ஏற்படுகிறது

இந்நோய்க்குக் காரணமான பூஞ்சையான ஸ்பாசெலோதிகா ரியலியானா நோய் வித்துக்களாக பல ஆண்டுகள் மண்ணில் இருக்கும் மற்றும் வேர்கள் மூலம் தனித்தன்மையுடன் பரவும். பெரும்பாலும் நாற்றுக்களுக்கான பருவத்தில் இவை அவ்வப்போது நிலத்தில் சில பயிர்களைத் தாக்கும். பின்னர் இந்தப் பூஞ்சைகள் வளர்ந்த பயிர்களின் அனைத்து பாகங்களிலும் வளரும், இதில் மஞ்சரி (குஞ்சம்) மற்றும் சோளக்காது ஆகியவையும் அடங்கும். இது கரிப்பூட்டை வளர்ச்சியாக பிரதிபலிக்கிறது, இது மஞ்சரி குஞ்சங்கள் மற்றும் சில சமயங்களில் மொத்த முழு தானியத்தையும் இடம்பெயர்த்துவிடும். தூய்மைக்கேடு ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு அசுத்தமான உபகரணங்கள் மூலம் ஏற்படலாம். குறைவான மண் ஈரப்பதம், சூடான வெப்பநிலை (21 முதல் 27 டிகிரி செல்சியஸ்) மற்றும் சத்துக் குறைபாடுகள் போன்றவை நோய்த் தொற்று மற்றும் அதன் பரவலுக்கு உகந்த சூழ்நிலைகளாகும். ஒருமுறை இந்நோய் தாக்கினால், அதன் பாதிப்புகளைச் சரிசெய்ய வலுவான செயல்பாடுடைய சிகிச்சை முறைகள் இல்லை.


தடுப்பு முறைகள்

  • தடுப்புவகை அல்லது தாங்கும் தன்மை கொண்ட பயிர்வகைகளைப் பயிரிடவும்.
  • முன்னதாகவே பயிரிடவும்.
  • விரைவாக வளரும் நாற்று வகைகளை பயிரிடவும்.
  • முடிந்தவரை அதிக ஆழமின்றி நடுதல் செய்யவும்.
  • தொடர்ச்சியான அளவில் நீர்ப்பாசனம் செய்யவும் மற்றும் மண் உலர்ந்துபோவதைத் தவிர்க்கவும்.
  • நிலத்தினை சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ளவும்.
  • நோய்க்கான வித்துக்கள் பரவுவதைத் தவிர்க்க, பாதிக்கப்பட்ட பயிர்களை நீக்கவும் மற்றும் எரித்துவிடவும்.
  • நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்துக்களை அளித்து உகந்த மண் வளத்தை உறுதி செய்யவும்.
  • அறுவடைக்குப் பின்னர் பயிரின் எஞ்சிய பாகங்களை நீக்கவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு மறு பயிரிடலை 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகத் திட்டமிட்டு செய்யவும் மற்றும் சோளத்தின் மாற்றுப் புரவலன்களை தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க