Puccinia porri
பூஞ்சைக்காளான்
எந்தவொரு வளர்ச்சி நிலையிலும் நோய்தொற்று ஏற்படலாம் மற்றும் அதன் அறிகுறிகள் முதன்முதலில் இலைகளில் தோன்றும். ஆரம்ப அறிகுறிகள் சிறிய, வெள்ளை புள்ளிகளாக இலை பக்கங்களில் இருபுறமும் தோன்றும். காலப்போக்கில், இந்தப் புள்ளிகள் பிரகாசமான ஆரஞ்சு துருப்பிடித்த கொப்புளங்களாக உருவாகும், இது விதைமூலத்தை உற்பத்தி செய்யும் கட்டமைப்புகளுடன் தொடர்புடையது. கொப்புளங்கள் வளரத் தொடங்குகையில், அவை விதைமூலங்களை வெளியிடுவதற்காக வெடித்துவிடும். இலைகள் இறுதியில் வெளிறிய நிறமாக மாறி, சிதைவுகள் இலைகளின் நீளவாக்கில் உருவாகக்கூடும், சில நேரங்களில் பிளவு போன்ற ஓட்டைகளையும் ஏற்படுத்தக்கூடும். அதிகமான நோய்த்தொற்றின் போது, தாவரங்கள் மஞ்சள் நிறமாகி வாடிவிடும். மேலும் தாவரங்கள் முன்கூட்டியே இறந்து விட நேரிடும். ஆரம்ப வளர்ச்சி நிலையிலேயே தாவரங்கள் பாதிக்கப்பட்டால் அல்லது கடுமையான பாதிப்பு ஏற்பட்டால், சிறிய சுருங்கிய தரம் குறைந்த குமிழ்கள் விளையக்கூடும்.
வருமுன் காப்பதே இந்தப் பூஞ்சை நோயை நீண்ட காலம் சமாளிப்பதற்கு ஒரே வழி. கந்தகம் கொண்ட சில சூத்திரங்கள் கரிமமாக கருதப்பட்டு,நோய் தொற்று ஆபத்துகளை குறைக்க ஒரு தடுப்பு முறையாக பயன்படுத்தலாம். இவற்றை வெவ்வேறு முறையில் பயன்படுத்தலாம், உதாரணமாக கந்தக தூளாக தெளிக்கலாம் அல்லது தாவரங்களில் தூவி விடலாம். அல்லது கந்தகத்தை தண்ணீருடன் கலந்து இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம் அல்லது தாவர அடி தளத்தைச் சுற்றி மண்ணில் ஊற்றலாம். முறையான பயன்பாட்டிற்கு, தொடர்புடைய தயாரிப்பு கையேட்டைப் பின்பற்றவும் அல்லது உங்கள் உள்ளூர் வர்த்தகரிடம் கேட்கவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அசாக்ஸிஸ்டிராபின் அல்லது மான்கொசெப் போன்றவற்றைக் கொண்டிருக்கும் தயாரிப்புகள் நோய் தொற்று ஆபத்துகளை தடுக்க இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தப்படலாம். இந்த பூஞ்சை நோயை குணப்படுத்த முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த நோய் புசினியா போரி என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது உயிருள்ள தாவர திசுக்களில் மட்டுமே வாழும். இது குளிர்காலத்தில் மாற்று புரவலன் (களைகள் அல்லது தன்னார்வ தாவரங்கள்) மீது உயிர்வாழும் அல்லது செயலற்ற பருவத்தைக் கடக்க வித்துக்களை உற்பத்தி செய்யும். இந்தப் பூஞ்சை வித்துக்கள் காற்று மற்றும் மழைப்பொழிவுகளால் பிற தாவரங்கள் அல்லது வயல்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதிக ஈரப்பதம், குறைந்த மழைபொழிவு மற்றும் 10-20° செல்சியஸ் வெப்பநிலையானது பூஞ்சையின் வாழ்க்கைச் சுழற்சிக்கும், நோய் பரவுதலுக்கும் மிகவும் சாதகமான நிலைகளாக இருக்கின்றன. இச்சூழ்நிலையில், பூஞ்சை வித்துக்கள் புரவலன் தாவரங்களில் தரையிறங்கியவுடன், பூஞ்சை வளர்ச்சியும் காலனித்துவமும் தொடங்குகிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவைப் பொறுத்து, நோய்த்தாக்கம் மற்றும் நோய் பரவுதல் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி 10-15 நாட்களுக்கு இடையில் அமையும். நோய் பரவுவதற்கான முக்கிய காலம் பிந்தைய கோடைகாலமாகும். இந்த நோய் அதிக விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும் மற்றும் குமிழ்களின் சேமிப்புத் திறனை குறைக்கும்.