Cladosporium cucumerinum
பூஞ்சைக்காளான்
இலைகளின் மீது இந்த நோய்க்கான அறிகுறிகள் எண்ணற்ற, சிறிய, நீர்-தோய்த்த அல்லது வெளிறிய பச்சை நிற புள்ளிகளாக தோன்றும். இந்த புள்ளிகள் படிப்படியாக உலர்ந்து, இறந்து, வெள்ளை நிறம் முதல் சாம்பல் நிறமாகி, கோணவடிவமாகிவிடும். பெரும்பாலும், இந்த காயங்கள் மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். அவற்றின் நடுப்பகுதி கிழிந்து, இலைகளில் கந்தையான துளைகளை ஏற்படுத்தும். மிகவும் கடுமையான அறிகுறிகள் பாதிக்கப்பட்ட பழங்களில் உருவாகும், மேலும் பூச்சிக் கொடுக்குகளை போன்று காணப்படும் . சிறிய (சுமார் 3 மி.மீ.), சாம்பல்நிற, சற்று மூழ்கிய, பசை போன்ற கசியும்- புள்ளிகள் முதலில் தோன்றும். பின்னர், இந்த புள்ளிகள் பெரிதாகி இறுதியாக தெளிவான மூழ்கிய குழிகள் அல்லது சொறிகளாக மாறும். பாதிக்கப்பட்ட பழம் பெரும்பாலும் மென்மையான-அழுகும் பாக்டீரியா போன்ற சந்தர்ப்பவாத நோய்க்காரணிகளால் ஆக்கிரமிக்கப்படும், இந்த பாக்டீரியா அருவெறுப்பான நாற்றத்துடன் சிதைவுகளை ஏற்படுத்தும். அதிக எதிர்ப்பு திறன் கொண்ட பழங்களில், குறிப்பாக பரங்கிக்காய் மற்றும் பூசணிக்காயில் ஒழுங்கற்ற, குமிழ் போன்ற அமைப்பு உருவாகலாம்.
வெள்ளரிக்காய் சொறி நோய்க்கு எதிராக நேரடி உயிரியல் சிகிச்சை சாத்தியம் இல்லை. நோய்க்காரணி பரவுவதை குறைக்க இயற்கையானது என்று சான்றிதழ் பெற்ற காப்பர்-அம்மோனியம் கலவையினை அடிப்படையாக கொண்ட பூஞ்சைக்கொல்லிகளை பயன்படுத்துங்கள்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். குளோரோத்தலோனில் கொண்டிருக்கும், அல்லது காப்பர்-அம்மோனியம் கலப்புகளை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளை பயன்படுத்துங்கள். நோய்க்கிருமிகளை அப்புறப்படுத்த, 10 நிமிடம் 0.5% சோடியம் ஹைபோக்ளோரைட்டுடன் விதைகளை மேற்பரப்பு தொற்று நீக்கவும். டைதியோகார்பாமெட்ஸ், மானெப், மான்கோஸெப், மெடிராம், குளோரோத்தலோனில் மற்றும் அனிலஸைன் ஆகியவற்றை கொண்ட பூஞ்சைக்கொல்லிகள் சி.குக்குமெரினம் என்பவற்றுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.
இந்த நோய்க்கான அறிகுறிகள் கிளாடோஸ்போரியம் குக்குமெரினம் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது தாவர கழிவுகள், மண்ணில் உள்ள வெடிப்புகள் அல்லது பாதிக்கப்பட்ட விதைகளில் குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கடக்கிறது. இத்தகைய ஏதேனும் ஒரு மூலத்திலிருந்து வசந்த காலத்தின் ஆரம்பத்தில் நோய் தொற்று ஏற்படக்கூடும். இந்த பூஞ்சை வித்துக்கள் உற்பத்தி செய்யும் அமைப்புகளை உருவாக்க ஆரம்பித்து, வித்துக்களை உற்பத்தி செய்யும். பூச்சிகள், உடைகள் அல்லது கருவிகளால் அல்லது ஈரமான காற்று மூலம் நெடுந்தூரத்திற்கு இந்த வித்துக்கள் பரவும். காற்றின் உயர் ஈரப்பதம் மற்றும் மிதமான வெப்பநிலை நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கும். 17 டிகிரி செல்சியஸ் மற்றும் 12-25 டிகிரி செல்சியஸ் இடையேயான மாறுபடும் வெப்பநிலையுடன், ஈரப்பதமான காலநிலை, அடிக்கடி ஏற்படும் மூடுபனி, பனித்துளி அல்லது லேசான மழை ஆகியன பூஞ்சை வளர்ச்சிக்கு சாதகமானதாக இருக்கும். தாவர திசுக்களில் பூஞ்சை ஊடுருவிய 3 முதல் 5 நாட்களுக்கு பிறகு அறிகுறிகள் தோன்றும்.