மக்காச்சோளம்

மக்காச்சோளம் கரிப்பூட்டை நோய்

Ustilago maydis

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • நாற்று நிலையில் இருக்கும் தாவரங்களின் வளர்ச்சி குன்றி காணப்படும், மேலும் இவை மஞ்சரிகள் அல்லது சோளக்காதுகளை உற்பத்தி செய்யாமல் இருக்கக்கூடும்.
  • முதிர்ந்த தாவரங்களில், நோய்த்தொற்றானது சோளக்காதுகளில் கருப்பு கசடு நிரப்பப்பட்ட பை போன்று உருவாவதற்கு வழிவகுக்கிறது.
  • அவை உடைகையில், அவற்றுள் தூளான கருப்பு உள்ளடக்கங்கள் காணப்படும்.
  • இலைகளில், கட்டி போன்ற வளர்ச்சியானது பொதுவாகச் சிறியதாக இருக்கிறது மற்றும் இவை உடையாமலேயே உலர்ந்து விடுகிறது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

தாவரங்களின் அனைத்து வளரும் பாகங்களும் இந்தப் பூஞ்சையால் பாதிக்கப்படக்கூடும். இவற்றை காயங்களுக்கு உட்படுத்துதல் மற்றும் வளர்ச்சித் திறன், இவற்றை மிகவும் வியத்தகு அறிகுறிகளைக் காண்பிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. நாற்று நிலையில் இருக்கும் தாவரங்கள் நோய்த் தொற்றுகளால் மிகவும் பாதிக்கப்படுகின்றன. அந்த சந்தர்ப்பங்களில், தாவரங்களின் வளர்ச்சி குன்றி மற்றும் இவை மஞ்சரிகள் அல்லது சோளக்காதுகளை உற்பத்தி செய்யாது. முதிர்ந்த தாவரங்களில், நோய்த் தொற்றானது கட்டி போன்ற வளர்ச்சி உருவாவதற்கு வழி வகுக்கிறது, இது புரவலன் மற்றும் பூஞ்சை திசுக்களின் கலவையாகும். கரிப்பூட்டை பைகள் ஆரம்ப கட்டங்களில் பச்சை வெள்ளை நிறத்திலும் மற்றும் முதிர்ச்சியடைகையில், கருப்பு நிறமாகவும் மாறும். இவை சோளக்காதுகளில் குறிப்பாக சிறப்பியல்புடையவை, இதில் உள்ள ஒவ்வொரு தானியங்களும் அதன் சொந்த பை போன்றவற்றை உருவாக்கும். அவை உடையும்போது, அவற்றுள் தூளான கருப்பு உள்ளடக்கங்கள் காணப்படும். இலைகளில், கட்டி போன்ற வளர்ச்சியானது பொதுவாகச் சிறியதாக இருக்கிறது, மற்றும் இவை உடையாமலேயே உலர்ந்து விடுகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூஞ்சையின் நேரடிக் கட்டுப்பாடு கடினமானது மற்றும் இந்த நோய்க்கிருமி பூஞ்சைக்கு எதிராக எந்தவொரு பயனுள்ள முறையும் இதுவரை உருவாக்கப்படவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூஞ்சைக் கொல்லிகளின் விதை மற்றும் இலைத்திரள் பயன்பாடு மக்காச் சோளத்தில் பொதுப்படையான கரிப்பூட்டை நோய்த்தொற்று ஏற்படுவதைக் குறைக்காது.

இது எதனால் ஏற்படுகிறது

மக்காச் சோளத்தின் பொதுப்படையான கரிப்பூட்டை நோயானது உஸ்டிலாகோ மேடிஸ் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது பல ஆண்டுகளுக்கு மண்ணில் உயிர் வாழக் கூடியது. காற்று, மணல் தூசு மற்றும் மழைத்துளிகள் மூலம் வித்துக்கள் தாவரங்களுக்குப் பரவுகிறது. பூச்சிகள், விலங்குகள், மோசமான சாகுபடி நடைமுறைகள் அல்லது ஆலங்கட்டி மழை ஆகியவற்றால் ஏற்படுகின்ற காயங்கள் நோய்த்தொற்றுச் செயல்முறைக்கு ஆதரவாக உள்ளது. ஒரு தாவரத்திலிருந்து பிற தாவரங்களுக்குப் பரவும் நேரடியான இரண்டாம் நிலை பரிமாற்ற காரணிகள் எதுவும் இல்லை. இந்த நோய்க்கான அறிகுறிகள் குறிப்பாக அதிக வளர்ச்சி திறன் (சோளக்காதுகள் அல்லது வளரும் நுனிகள் போன்ற) கொண்ட திசுக்களில் கடுமையாக இருக்கும். வானிலையின் இரு எதிர் துருவங்களால் (கடுமையான மழையைத் தொடர்ந்த வறட்சி போன்றவை) ஏற்படும்  குறைவான மகரந்த உற்பத்தி மற்றும் மோசமான மகரந்தச் சேர்க்கை விகிதங்கள் போன்றவை பூஞ்சை பரவுவதற்கு உகந்ததாக உள்ளன.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத் தன்மை கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைப் பயிர் செய்யவும்.
  • தாவரங்களுக்கு இடையே பரந்த இடைவெளிவிடவும்.
  • கருத்த பூஞ்சை வித்துக்கள் வெளியிடப்படுவதற்கு முன்பாக, பைகளைக் கண்காணித்து, அவற்றைச் சேகரித்து மற்றும் அழித்துவிடவும்.
  • பூச்சிகள் மற்றும் பிற நோய்க் கிருமிகள் மூலம் ஏற்படும் சேதங்களைத் தடுக்கவும்.
  • பயிர்களைச் சாகுபடி செய்யும்போது பயிர்களுக்கு சேதங்கள் விளைவிப்பதைத் தவிர்க்கவும்.
  • கருவிகள் மற்றும் உபகரணங்கள் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்தவும்.
  • நைட்ரஜன் கொண்ட உரங்களை அதிகப்படியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப்பின் அனைத்து கழிவுகளையும் அகற்றிவிடவும் மற்றும் பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை உரமாக்க வேண்டாம்.
  • அறுவடைக்குப் பிறகு தாவரக் குப்பைகளை புதைக்க ஆழமாக உழுதல் வேண்டும்.
  • புரவலன் அல்லாத தாவரங்களைக் கொண்டு நீண்ட காலப் பயிர்ச் சுழற்சி முறையைத் திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க