முட்டைக்கோசு

கரும்பூசண நோய்

Alternaria brassicae

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • சாம்பல்-பழுப்பு நிற, வட்டமான புள்ளிகள் வெவ்வேறு அளவுகளில் இலைகளில் காணப்படும், பெரும்பாலும் இவை வெளிறிய ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும்.
  • காலப்போக்கில், மையங்கள் காகிதம் போன்று மெல்லிசாகி மற்றும் இறுதியாகக் கீழே விழுந்து "குண்டடிபட்டத் துளை" போன்ற தோற்றத்துடன் காணப்படும்.
  • இலைகள் வெளிறிய தோற்றம் பெறும் மற்றும் கடுமையான பாதிப்புகளில் இலை உதிர்தல் ஏற்படலாம்.
  • பாதிக்கப்பட்ட விதைகளினால் புதியதாக வளர்ந்த நாற்றுக்களில் பூசணத்தாக்கம் ஏற்படலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
முட்டைக்கோசு
பூக்கோசு.

முட்டைக்கோசு

அறிகுறிகள்

வெளியே தெரியும் அனைத்துத் தாவர பாகங்களும் பாதிக்கப்படக்கூடும் மற்றும் வெவ்வேறு வகைப் பயிர்கள் வெவ்வேறு பாதிக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். சாம்பல்-பழுப்பு நிற, வட்டமான புள்ளிகள் முதிர்ந்த இலைகளில் காணப்படும். இவை சிறிய, தனித்தனியான கருநிறப் புள்ளிகள் முதல் 12 மி.மீ வரையிலான பெரிய பகுதிகள் வரை பழுப்பு நிற மையங்களுடன் காணப்படும். இந்தக் காயங்கள் பூசண வித்துக்களைத் தனது மையப்பகுதியில் கொண்டு மற்றும் வெளிறிய ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். காலப்போக்கில், மையங்கள் காகிதம் போன்று மெல்லிசாகி, இறுதியாகக் கீழே விழுந்து "குண்டடிபட்டத் துளை" போன்ற தோற்றத்துடன் காணப்படும். இலைகள் வெளிறிய தோற்றம் பெறும் மற்றும் கடுமையான பாதிப்புகளில் இலை உதிர்தல் ஏற்படலாம். பாதிக்கப்பட்ட விதைகளிலிருந்து நாற்றுக்கள் வளரும் போது, நோய்க்கிருமிகள் பொதுவாக புதிதாக உருவான நாற்றுக்களில் பூசணத்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் புள்ளிகள் காய்கள் அல்லது தண்டுகளின் அடிப்பகுதியில் ஏற்படலாம், தண்டுகளில் உருவாகும் அறிகுறிகளுக்கு கருப்புத்தண்டு என்று பெயர்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், இப்பூஞ்சைகளுக்கு எதிராகத் தற்போது எங்களிடம் எவ்விதச் சிகிச்சை முறைகளும் இல்லை. இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் உங்களுக்குத் தெரிந்து இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். களத்தினைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து மற்றும் பூஞ்சைக்கொல்லிப் பயன்பாட்டின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கு சரியான கண்டறிதல் அவசியம். விதைச் சிகிச்சை முற்றிலும் அவசியமானது. முதல் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனே இலைவழியே தெளித்தல் முறையில் சிகிச்சையளிப்பது நோயினைக் கட்டுப்படுத்தும் மற்றொரு வழியாகும். இறுதியாக, சேமிப்பிற்கு முன்பாக செய்யப்படும் சிகிச்சை முறைகளால் சேமிப்பின்போது எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம். சிகிச்சை முறைகளின் நம்பகத் தன்மை, பயிரின் வகை மற்றும் சுற்றுச்சுழல் நிலைகளைப் பொறுத்துப் பலவகையான கலவைகளைப் பயன்படுத்தலாம். இந்தக் கலவையில் அனிலஸின், குளோரோதலோனில், டைஃபெனோகோனஸோல், இப்ரோடிடையோன், மான்கோசெப், மானேப் போன்றவை அடங்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

அல்டெர்னாரியா ப்ராசிக்கே எனும் விதை வழியே பரவும் பூஞ்சைகளினால் இந்த நோய் அறிகுறிகள் ஏற்படுகிறது, இது முட்டைக்கோஸ் மற்றும் பிற ப்ராசிக்கா குடும்ப வகைப் பயிர்களில் ஏற்படும் பொதுவான நோயாகும், இந்த நோய்க்கான அறிகுறிகளானது நடவு செய்யப்படும் பயிர்களைப் பொறுத்து மாறுபடும். அல்டெர்னாரியா ப்ராசிகோலா எனும் பூஞ்சைகளினாலும் சில பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த நோய்க்கிருமிகள் பரவுவதற்கான பிரதான வழி பாதிக்கப்பட்ட விதைகளால் ஏற்படுகிறது. இவற்றின் விதைப் உறைகளில் அல்லது உட்புற திசுக்களின் பூஞ்சை இழைகளில் வித்துக்கள் இருக்கலாம். இந்த இருவகைகளிலும், பூஞ்சைகள் படிப்படியாக பயிர்களில் குடியேறி மற்றும் நோய் அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. பாதிக்கக்கூடிய களைகள் அல்லது சிதைவுறாத பயிரின் எஞ்சிய பாகங்கள் போன்றவற்றில் இந்தப் பூஞ்சைகள் உயிர்வாழ்கின்றன. இலைகளில் உள்ள இயற்கையான துளைகள் அல்லது காயங்கள் வழியே ஆரோக்கியமான பயிர்களின் திசுக்களில், வித்துக்கள் உள்நுழைகின்றன. ஈரமான சூழல்கள், காற்றுடன் கூடிய மழை மற்றும் சூடான வெப்பநிலை (20-24 டிகிரி செல்சியஸ்) போன்ற சூழல்கள் நோய்க்கு ஏற்றச் சாதகமான சூழல்களாகும்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்களிடம் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான விதைகளைப் பயன்படுத்தவும்.
  • சில கிழங்குவகைகள் இந்த நோய்க்காரணிக்கான எதிர்ப்புத் திறனை சில வகைகளில் கொண்டிருக்கும்.
  • பயிர்களுக்கு இடையே போதுமான இடைவெளிவிட்டு பயிரிட்டு போதுமான காற்றோட்ட வசதியினை ஏற்படுத்தவும்.
  • நோய் அறிகுறிகள் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும்.
  • மண்ணில் படும் முதிர்ந்த இலைகளை அகற்றி மற்றும் சேகரிக்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பயிரின் எஞ்சிய பகுதிகளை அழித்துவிடவும்.
  • நிலத்திற்குள் மற்றும் நிலத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் களைகளை, முக்கியமாக ப்ராசிக்கா குடும்பவகைப் பயிர்களை நீக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க