Plasmodiophora brassicae
பூஞ்சைக்காளான்
நிலத்திற்கு மேல் மற்றும் கீழ் பகுதிகளில் அறிகுறிகளைக் காணலாம். குன்றிய வளர்ச்சி மற்றும் இலைகள் மஞ்சள் நிறமாதல் போன்றவற்றினால் தாவரங்கள் மொத்தத்தில் சிதைந்துவிடும். உலர் வானிலையில் அவை வாடிப்போகும் ஆனால் ஈரமான சூழ்நிலைகளில் பரவத்தொடங்கும். இலைகள் ஊதா நிறமாகலாம். நிலத்திற்குக் கீழ் காணப்படும் வேர்களில் முடிச்சுகள் வீங்கியது போன்ற தோற்றம் மற்றும் சிறிய வேர்களின் இழப்பு (வேர் முடிகள் என்றழைக்கப்படும்) போன்றவை நிலத்திற்கு கீழ் ஏற்படும் அறிகுறிகளுள் அடங்கும். பிற்காலத்தில், வீக்கங்களானது கடுமையான உருக்குலைவை ஏற்படுத்தி, வேர்களில் சாதாரண இணைப்புக்கு பதிலாக முடிச்சுகள் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தும் (இதனால் வேர்முடிச்சு நோய் எனும் பெயர் பெற்றது). வளர்ச்சி மற்றும் மகசூல் வெகுவாகக் குறையும் மற்றும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பயிர்கள் இறந்துவிடலாம்.
மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவு மதிப்பினை அதிகரிக்க கூடிய ஒரே உயிரியல் கட்டுப்பட்டு வழிமுறை மண்ணில் கடற்சிப்பி ஓடுகள் அல்லது டோலோமைட் சுண்ணாம்பினை சேர்ப்பதாகும் (சிறிய தோட்டக்காரர்கள் மற்றும் விவசாயிகள்). எளிய மற்றும் மலிவான மண் சோதனைக் கருவிகளைக் கொண்டு மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவு மதிப்பினை அடிக்கடி சோதித்துக்கொள்ளவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். மண் புகையூட்டல் முறையினைப் பயன்படுத்தினால் நூறு சதவீத பலன் கிடைப்பதில்லை.எனவே இவை பரிந்துரைக்கப்படவில்லை. மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவு மதிப்பினை அதிகரிக்க (7.2) சுண்ணக்கலப்பு செய்தல் (கால்சியம் கார்பனேட் CaCO3) மற்றும் ஹைட்ரஜனேற்றம் செய்த சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்ஸைடு Ca(OH)2) போன்ற செயல்முறைகளை பயிரிடுதலுக்கு முன்பு செய்வதன் மூலம் நோய் தாக்குவதைக் குறைக்கலாம்.
மண்ணின் வாழும் ப்ளாஸ்மோடியோபோரா ப்ராசிக்கே நோய்க்காரணிகளினால் இந்த நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இது ஒட்டுண்ணி போன்று பிற பயிர்களை பாதிக்கும், இதனால் கோசுக்கீரை வகை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப் மற்றும் முள்ளங்கிகள் பாதிக்கப்படும். இந்த நோய்க்காரணி உருவாக்கும் வித்துக்கள் செயலற்ற நிலையில் சுமார் 20 ஆண்டுகள் வரை மண்ணிலிருக்க வல்லது. தாக்குவதற்கு ஏதுவான பயிர்கள் கிடைத்ததும் இந்த வித்துக்கள் முளைக்கும், பின்னர் வேர் முடிகளை பாதிக்கும், அதன் பின்னர் வேர் முடிச்சுக்களை உருவாக்கும், அதனால் இப்பெயர் பெற்றது. இந்த ஒட்டுண்ணிகள் அடுத்த வித்துக்களைத் தோற்றுவித்து மண்ணில் பரவச்செய்யும், அதன்பின்னர் தனது வாழ்க்கைச் சுழற்சியினை முடித்துக்கொள்ளும். ஈரமான மற்றும் வெப்பமான மண் நோய்க்கு ஏதுவான சூழலாகும். மண்ணிற்கு சுண்ணக்கலப்பு செய்து, மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவு மதிப்பினை அதிகரிப்பதன் மூலம் வேர்முடிச்சு நோயினைக் குறைக்கலாம் (ஆனால் நீக்க முடியாது).