மற்றவை

ஃபுசேரியம் வாடல் நோய்

Fusarium oxysporum

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • தாவரங்கள் வாடிப்போகும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகும்.
  • தண்டுகளுக்குள் கறை படிந்த பழுப்பு அல்லது சிவப்பு நிறம் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

24 பயிர்கள்
விதையவரை
பாகற்காய்
முட்டைக்கோசு
கடுகு எண்ணெய்
மேலும்

மற்றவை

அறிகுறிகள்

இந்த பூஞ்சையின் சேதங்களானது பயிர் சார்ந்த தோற்ற அமைப்புடன் காணப்படும். சில சந்தர்ப்பங்களில், இளம் பருவத்தில் கூட, இலைகள் மஞ்சள் நிறமாற்றத்துடன் தாவரங்கள் வாடிய தோற்றத்துடன் காணப்படும். முதிர்ந்த தாவரங்களில், தாவரங்களின் பாகங்களில் லேசான வாடும் தன்மை அடிக்கடி தோன்றுகிறது. இது வெப்பமான பகல் நேரங்களில் பொதுவாக ஏற்படுகிறது. இலைகள் பிறகு, பெரும்பாலும் ஒரு பக்கங்களில் மட்டும், மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது. தண்டுகளில் உள்ள நீளவாட்டு பகுதிகளின் உட்புற திசுக்களில் பழுத்த - சிவப்பு நிறமாற்றம் காணப்படும். இவை முதலில் தண்டுகளின் அடிப்பகுதியிலும் பின்பு மேல்பகுதியிலும் ஏற்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பல உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், பாக்டீரியா மற்றும் எஃப். ஆக்சிஸ்போரம் ஆகியவற்றின் நோயாக்க கிருமிஅல்லாத திரிபுகள், நோய் கிருமிகளை எதிர்த்து போராடி, சில பயிர்களில் ஃபுசேரியம் வாடல் நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. டிரைக்கோடெர்மா விரிடே என்பவற்றையும் விதைகளுக்கு (10 கிராம் / கிலோ விதை) சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம். சில மணல்கள் ஃபுசேரியம் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. மண்ணின் பிஹெச் அளவை 6.5-7.0 ல் பராமரித்தல், நைட்ரஜன் ஆதாரமாக அம்மோனியத்திற்கு பதில் நைட்ரேட்டை பயன்படுத்துவதன் மூலமாக நோய் தொற்றின் தீவிரத்தை குறைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். எந்தவொரு நடவடிக்கைகளும் திறம்பட வேலைசெய்யாவிட்டால், மண் சார்ந்த பூஞ்சைக் கொல்லிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தவும். பயிரினை இடமாற்றம் செய்யும் முன்பு அல்லது விதைப்பதற்கு முன்பு காப்பர் ஆக்ஸிகுளோரைடினை தண்ணீரில் லிட்டருக்கு 3 கிராம் வீதம் மண்ணில் குழிகளை உருவாக்கி பயன்படுத்துவதன் மூலம் பலன் பெறலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

ஃபுசேரியம் வாடல் நோய் பரிமாறப்படும் தாவரங்களின் திசுக்களில் வளர்ந்து, தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை பாதிக்கும். வேர்களில் காணப்படும் காயங்கள் மூலமாக அல்லது அவற்றின் நுனிகள் மூலமாக இது தாவரங்களை நேரடியாக பாதிக்கும். நோய்த்தொற்று ஒரு பகுதியில் ஏற்பட்டால், அது பல ஆண்டுகள் செயல்பாட்டு நிலையில் அங்கு வாழும்.


தடுப்பு முறைகள்

  • நோய்எதிர்ப்பு திறன் கொண்ட தடுப்பு தாவர வகைகளை பயன்படுத்தவும்.
  • நைட்ரஜன் ஆதாரமாக நைட்ரேட்டை பயன்படுத்தவும் மற்றும் 6.5-7.0 அளவில் மண்ணின் ஹைட்ரோஜென் அயனிச்செறிவை பராமரிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை கண்காணித்து நீக்கவும்.
  • உங்கள் உபகரணங்களை சுத்தமாக வைத்து கொள்ளவும், தாவரங்களுக்கு சேதங்கள் விளைவிப்பதை தவிர்க்கவும்.
  • பொட்டாஷ் உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவு பயன்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பிறகு தாவர குப்பைகளை உழுது, புதைத்துவிடவும் அல்லது எரித்துவிடவும்.
  • பூஞ்சையைக் கொல்ல ஒரு மாதத்திற்கு முழு வெயிலில் பாதிக்கப்பட்ட பகுதியை கருப்பு பிளாஸ்டிக் தகடு கொண்டு மூடவும்.
  • 5-7 ஆண்டுகள் வரை பயிர் சுழற்சி செய்வது மண்ணில் உள்ள பூஞ்சை அளவுகளை குறைக்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க