விதையவரை

கரும்புள்ளி நோய்

Colletotrichum lindemuthianum

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகள் மற்றும் தண்டுகளில் வட்டமான, அடர் பழுப்பு முதல் கருப்பு நிறத்தில் மூழ்கிய புள்ளிகள்.
  • இலை நரம்புகள் மற்றும் இலைக்காம்புகளில் கோண வடிவில் செங்கல்-சிவப்பு முதல் கருப்பு நிறம் வரையிலான காயங்கள்.
  • வட்ட, வெளிர் பழுப்பு முதல் துரு நிற புண்கள், காய்கள் மற்றும் தண்டுகள் கரு நிற ஓரங்களால் சூழப்பட்டிருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

விதையவரை

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட விதைகளிலிருந்து வளர்க்கப்படும் நாற்றுகளின் பெரும்பாலான இலைகள் மற்றும் தண்டுகளில் வட்டமான, அடர் பழுப்பு முதல் கருப்பு நிறம் வரையிலான மூழ்கிய புள்ளிகள் காணப்படும். நாற்றுகள் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும், மேலும் அவை முன்கூட்டியே இறந்துவிடக்கூடும் அல்லது குன்றிய வளர்ச்சியுடன் காணப்படும். இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளின் போது, இலை நரம்புகள் மற்றும் இலைக்காம்புகளில் கோண வடிவில், செங்கல்-சிவப்பு முதல் கருப்பு நிறம் வரையிலான புண்கள் உருவாகும், இது முதலில் இலைகளின் அடிப்பகுதியிலும், பின்னர் மேல் பக்கத்திலும் காணப்படும். வட்ட வடிவில், வெளிர் பழுப்பு முதல் துரு நிற புண்கள் காய்களிலும், தண்டுகளிலும் கரு நிற ஓரங்களால் சூழப்பட்டிருக்கும். கடுமையாக பாதிக்கப்பட்ட காய்களில், இந்த புண்கள் சுருங்கி சிறிது சிதைந்து, மூழ்கிய சொறிநோய் போன்ற தோற்றத்தை அடையும். பாதிக்கப்பட்ட விதைகள் பெரும்பாலும் நிறமாற்றம் அடைந்து பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிற சொறி நோய்களாக உருவாகும். பொதுவான அவரை தாவரங்கள் இந்த நோயால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வளரும் பருவத்தின் வெப்பமான காலம் முழுவதும் ஒவ்வொரு 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் வேப்ப எண்ணெயின் சாறுகள் பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. உயிரியல் காரணிகள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் உதவும். டிரைக்கோடெர்மா ஹார்சியானம் மற்றும் சூடோமோனாஸ் ஃப்ளூரெசென்ஸ் பாக்டீரியம் போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை விதை சிகிச்சையாகப் பயன்படுத்துகையில், அது கொலெட்டோட்ரிகம் லிண்டெமுத்தியானத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. விதைகளை 10 நிமிடங்களுக்கு சூடான நீரில் (50 ° செல்சியஸ்) மூழ்கடித்து பூஞ்சைகளைக் கொல்லவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். விதை பூசண கொல்லிகளின் இலைத்திரள் பயன்பாடுகள் புலத்தில் நோயின் தீவிரத்தை குறைக்கலாம், ஆனால் அவை அரிதாகவே சிக்கனமானவை. இலைத்திரள்கள் வறண்டு இருக்கும்போது மான்கோசெப், குளோரோத்தலோனில், புளூட்ரியாஃபோல், பென்கோனஸோல் அல்லது செம்பு சார்ந்த தயாரிப்புகளைக் கொண்ட பூசண கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

கோலெட்டோட்ரிகம் லிண்டெமுத்தியானம் என்ற பூஞ்சையால் கரும்புள்ளி நோய் ஏற்படுகிறது. இது முக்கியமாக விதை மூலம் பரவுகிறது, ஆனால் பயிர் எச்சங்கள் மற்றும் மாற்று புரவலன்களிலும் உயிர்வாழ்கிறது. சுற்றுச்சூழல் நிலைமைகள் சாதகமாக இருக்கும்போது, அது அதன் வித்துக்களை வெளியாக்குகிறது, இது காற்று மற்றும் மழையால் வயலில் பரவுகிறது. குளிர்ச்சியானது முதல் மிதமான வெப்பநிலை (13-21 ° செல்சியஸ்), அதிக ஈரப்பதம், பனி, ஈரமான இலைத்திரள் அல்லது அடிக்கடி பெய்யும் மழை போன்ற காலங்கள் பூஞ்சையின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் நோயின் முன்னேற்றத்திற்கு சாதகமாக இருக்கும். நீரின் இருப்பினால் பூஞ்சை பரவுகிறது, இலைத்திரள் ஈரமாக இருக்கும்போது மேற்கொள்ளப்படும் வயல்பணியின்போது ஏற்படும் இயந்திரக்காயங்கள் காரணமாகவும் இது பரவுகிறது. பூஞ்சை நெற்று மீது படையெடுத்து வித்திலைகள் அல்லது விதை தோலை பாதிக்கலாம்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட பொருட்களிலிருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • நெகிழ்வுத்தன்மை கொண்ட வகைகளை பயன்படுத்தவும்.
  • தாவரங்களுக்கு இடையில் நல்ல காற்றோட்டத்தை பராமரிக்கவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்கள் அல்லது வயல்களை சரிபார்க்கவும்.
  • களைகள் மாற்று புரவலனாக செயல்படுவதால், உங்கள் வயல்களுக்கு அருகிலுள்ள அதிகப்படியான களை வளர்ச்சியைத் தவிர்க்கவும்.
  • நல்ல வயல் சுகாதாரத்தை வழங்கவும்.
  • இலைத்திரள்கள் ஈரமாக இருக்கும்போது, வயலில் பணி செய்வதை தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப்பிறகு பாதிக்கப்பட்ட தாவர குப்பைகளை மண்ணில் ஆழமாக புதைக்கவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
  • ஆரோக்கியமான விதைகளுக்கு நோய் பரவுவதைத் தவிர்க்க உங்கள் சேமிப்பு வசதியை சுத்தமாக வைத்திருக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க