செம்புற்றுப்பழம்

பொதுவான இலைப்புள்ளி நோய்

Mycosphaerella fragariae

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பொதுவாக இளஞ்சிவப்பு புள்ளிகள் முதிர்ந்த இலைகளில் தென்படும்.
  • அவை முதிர்ந்தவையாகும்போது அவற்றின் மையப்பகுதி வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் மாறும்.
  • இலைகள் வண்ணமற்று, உலர்ந்து, அழிந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
செம்புற்றுப்பழம்

செம்புற்றுப்பழம்

அறிகுறிகள்

ஸ்ட்ராபெர்ரியின் வகை மற்றும் சுற்றுச்சூழல் நிலைகளைப் பொறுத்து இதன் அறிகுறிகள் அமையும். முதிர்ந்த இலைகளின் மேற்பரப்பில் (சுமார் 3-6 மிமீ வரை விட்டம் கொண்ட) இளஞ்சிவப்பு புள்ளிகள், சிலவேளைகளில் அடர் ஒளிவட்டத்துடன் காணப்படும். சில சமயங்களில், இந்த புள்ளிகள் முதிர்ந்து வெள்ளை முதல் சாம்பல் நிறமாகி, பழுப்பு நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். வித்தியாசமான ஒரேவிதமான பழுப்பு நிற சிதைவுகள், அடர் ஓரங்கள் மற்றும் வெளிறிய மையப்பகுதிகள் இல்லாமல், சூடான ஈரமான வானிலையில் இளம் இலைகளில் ஏற்படும். பின்னர் இலை முழுவதும் அதிக எண்ணிக்கையிலான சிதைவுகளால் சூழப்பட்டு, வண்ணமற்று, உலர்ந்து, அழிந்துவிடும். புதிதான, இளம் இலைகள் நோய்க்காரணிகளால் தாக்கப்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நீட்சியடைந்த சிதைவுகள் காம்புகள் மற்றும் தண்டு ஓடுகளில் உருவாகலாம், இவை பயிர்களுக்குள் நீர் செல்வதைத் இடையூறு செய்யும் மற்றும் பிற காரணிகளால் பயிருக்கு சேதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் அதே விளைவுகளை, பாசில்லஸ் செரெஸ் மற்றும் பூஞ்சை சாச்சாரோமைஸெஸ் பௌலர்டி போன்ற பாக்டீரியாக்களைக் கொண்ட கரைசல்களை பயன்படுத்தியும் பெறலாம் என ஆய்வுக்கூட முடிவுகள் கூறுகின்றன. இருப்பினும், இம்முறை இதுவரையில் பெரிய அளவிலான நிலங்களுக்கு பயன்படுத்தி சோதிக்கப்படவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும் முன்பே நோயின் வீரியத்தினால் விரைவாக பாதிப்புகள் ஏற்படுவதால் இந்நோயினைக் கட்டுப்படுத்துவது கடினம். குளோரோதலோனில், மைக்லோபுடனில் அல்லது டிரைஃப்ளுமிஸோல் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தி, முதல் அறிகுறிகள் ஏற்பட்ட உடனே நோயினைக் கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். வசந்த கால ஆரம்பத்தில் அல்லது சீர்த்திருத்தம் செய்த உடனே, விரைவாக சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இவற்றினை தெளித்தல் முறையில் இரு வாரகால இடைவெளியில் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

மைகோஸ்பெரெல்லா ஃப்ராகரியே எனும் பூஞ்சைகளினால் இந்த நோய்க்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன. இவை மண்ணில் உள்ள பயிர்களின் எஞ்சிய பகுதிகளில் தனது குளிர்காலத்தை கழிக்கும். வசந்த காலத்தில், அவை தனது வளர்ச்சியினை மீண்டும் தொடங்கி, வித்துக்களை உருவாக்கும். வித்துக்கள் அடிப்புற இலைகளுக்கு சென்று அருகிலுள்ள பயிர்களைப் பாதிக்கும். இலையின் மேற்புற அடுக்கில் இருக்கும் நோய் பூஞ்சைகள், நோய் குழாய்களை உருவாக்கி, இலைகளின் மேல்புறம் மற்றும் கீழ்ப்புறங்களில் இருக்கும் இயற்கை துளைகள் வழியாக ஊடுருவும்.. இவை வளரும்போது பூஞ்சைகள் கொத்து கொத்தாக உருவாக்கப்பட்டு அவை மழைச்சாரல் மற்றும் காற்றின் மூலம் புதிய இலைகளுக்கு பரவுகின்றன. மனிதன் அல்லது இயந்திரங்கள் மூலம் ஏற்படும் துப்புரவற்ற செயல்களும் இதற்குக் காரணமாக அமையலாம். கனிகள் நேரடியாக பாதிக்கப்படுவதில்லை ஆனால், இலைகள் இழப்புகளினால் கனிகளின் மகசூல் மற்றும் தரம் பாதிக்கப்படும். குளிர்ந்த பகல் நேர வெப்பநிலை (சுமார் 25 டிகிரி செல்சியஸ்) மற்றும் குளிர்ந்த இரவு நேர வெப்பநிலை, அதிகப்படியான ஒப்பு ஈரப்பதம் மற்றும் நீண்ட நேரம் இலையில் ஈரம் நீடித்திருப்பது போன்றவை இந்நோய்க்கு ஏதுவான சூழலாகும். பயிர்களுக்கிடையே குறைந்த இடைவெளி போன்ற மோசமான விவசாய நடைமுறைகளினால் நோய் தொற்றிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் அளிக்கப்பட்ட மூலங்களிடம் இருந்து மட்டும் விதைகளைப் பெறவும்.
  • நெகிழ்திறன் கொண்ட பயிர் வகைகள் உங்கள் பகுதிகளில் கிடைத்தால் அவற்றினைப் பயிரிடவும்.
  • லேசான, நன்கு உலர்ந்த மண்ணில் சிறந்த காற்றோட்டத்துடன் கூடிய பகுதியில் பயிரிடவும்.
  • பயிர் பகுதிகளில் களைகள் இருப்பதைத் தவிர்க்கவும்.
  • மாலைப் பொழுதுகளில் நீர்ப்பாசனம் செய்வதைத் தவிர்த்து அதிகப்படியான ஈரப்பதத்தினைக் குறைக்கவும்.
  • சரியான அளவில் உரங்களை அளிக்கவும், முக்கியமாக நைட்ரஜன் உரங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்தக் கூடாது.
  • பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் பயிரின் எஞ்சிய பாகங்களை எரித்துவிடவும் அல்லது வெகுதொலைவில் உள்ள பகுதிகளில் புதைத்துவிடவும்.
  • இலைகள் ஈரமாக இருக்கும்போது களப்பணிகளில் ஈடுபட வேண்டாம், பயிர்களில் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க