மற்றவை

வெர்டிசிலியம் வாடல் நோய்

Verticillium spp.

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • ஓரங்களில் இருந்து தொடங்கி இலைகள் மஞ்சள் நிறமாகுதல்.
  • பிரதான இலை நரம்புகள் பச்சை நிறத்திலேயே இருத்தல்.
  • தண்டு மீது கருப்பு கோடுகள்.
  • தாவரங்கள் வாடிப்போகுதல்.

இதிலும் கூடக் காணப்படும்

26 பயிர்கள்
சீமைவாதுழைப்பழம்
விதையவரை
பாகற்காய்
முட்டைக்கோசு
மேலும்

மற்றவை

அறிகுறிகள்

பல்வேறு பயிர்களுக்கு இடையில் அறிகுறிகள் வேறுபடும். பொதுவாக முதன்முதலில் முதிர்ந்த இலைகள் மஞ்சளாகத் தோன்றும், பின்னர் அதனைத் தொடர்ந்து திசு அழுகல் அல்லது திசு இறப்பு ஏற்படும். குறிப்பிட்ட நிலையில், இலைகளில் வாடிய தோற்றம் காணப்படும், பெரும்பாலும் இலைகளின் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படும், இவை "பகுதி பச்சைய சோகை" அல்லது "ஒரு பக்க வாடல்" என்று அழைக்கப்படுகிறது. தண்டு மீது ஒரு தொடர்ச்சியான கருப்பு பட்டை தோன்றி, அது அடியிலிருந்து மேல்நோக்கி படர்ந்து தண்டுகளை வாடச்செய்யும். மரங்களில், குன்றிய வளர்ச்சி, தளிர் இலைகள் விரைவில் முதிர்ச்சியடைதல், மர திசுக்கள் மரபுக்கறையூட்டல் போன்றவை முக்கிய அறிகுறிகளாக தென்படும். வட்ட வளையங்கள் அல்லது கோடுகள் வடிவில் மர திசுக்களின் கறை கூடுதல் அறிகுறிகளாக தென்படலாம். சில நேரங்களில், கண்ணாடி வில்லை (லென்ஸ்) கொண்டு கூர்ந்து ஆய்வு செய்யும்போது, இறந்த திசுக்களில் அல்லது உயிர்வாழும் திசுக்களிலும் சிறிய கருப்பு புள்ளிகள் காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஸ்ட்ரெப்டோமைசஸ் லிடிகஸ் கொண்ட உயிரியல் பூஞ்சைக்கொல்லிகள், பூஞ்சையின் வாழ்க்கை சுழற்சியை உடைத்து, மேலும் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மரங்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து அவற்றை மீட்பது மிகவும் சிரமமான விஷயமாகும். மண் புகையூட்டி பயன்பாடு பயனுள்ளதாக இருக்கிறது, ஆனால் இது விலை உயர்ந்த கட்டுப்பாடு தந்திரோபாயம் ஆகும். இவற்றின் செயல்திறன் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள், அவற்றின் விகிதம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் ஆகியவற்றை சார்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட தாவர பாகங்களுக்கு சிகிச்சையளிப்பது குறித்தும் எதிர்பார்க்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

வெர்டிசிலியும் வாடல்நோய் மண் மூலம் பரவும் பூஞ்சையினால் ஏற்படுகிறது, இவற்றுள் வி.தஹ்லியே என்பதும் அடங்கும். இது புரவலன் இல்லாதபோது, மண்ணில் இருக்கும் பயிர் கழிவுகளில் உயிர்வாழக்கூடியது. இது மரப்பட்டையில் இருக்கும் சிறுவேர் அல்லது சிதைவுகள் மூலம் கடத்துதிசுக்களில் நுழைகிறது. தாவரம் அல்லது மரத்தின் உள்ளே சென்ற பிறகு, இது விரைவாக வளர்ந்து, நீர் மற்றும் ஊட்டச்சத்து பரிமாற்றங்களை தடைசெய்கிறது, இதனால் காற்றில் வெளிப்படும் பாகங்கள் (இலைகள் மற்றும் தண்டுகள்) வாடி, சிதைந்து விடுகின்றன. இது சூரிய ஒளி வலுமிக்க காலங்களில் தீவிரமடையக்கூடும். நோய்களின் பிந்தைய நிலைகளில், பூஞ்சைகள் இறக்கும் திசுக்களில் குடிபெயர்கிறது, உருப்பெருக்கு கண்ணாடி கொண்டு பார்க்கும்போது இருண்ட கட்டமைப்புகள் உருவாகியிருப்பதை காணலாம். பூஞ்சை ஒரு இடத்தில் பல ஆண்டுகள் வாழக்கூடியது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு திறன் அல்லது நோய் சகிப்புத் தன்மை கொண்ட தாவர வகைகளைப் பயன்படுத்தவும்.
  • நோய்களை பரப்பக்கூடிய எளிதில் பாதிக்கக்கூடிய ஊடுபயிர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • தழைச்சத்து மிகுதியாக உள்ள உரங்கள் மற்றும் அதிகப்படியான தண்ணீர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • அதிகமான தொற்றுக்கு எதிராக தாவரங்களை வலுப்படுத்த தாவர செறிவூட்டியை பயன்படுத்தவும்.
  • தாவரத்தின் அழிந்த அல்லது தேவையில்லாத பகுதிகளை வெட்டி எடுத்து எரித்து விடவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை கையாண்ட பிறகு அனைத்து கருவிகள் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்யவும்.
  • இலைதிரள்கள் ஈரமாக இருக்கும் போது வயல்களில் வேலை செய்ய வேண்டாம்.
  • வயலில் வேலை செய்யும்போது வேர்களுக்கு சேதங்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • சில மணி நேரம் மண்ணை சூரிய வெளிச்சத்திற்கு( வெயிலில் வைத்தல்) வெளிப்படுத்தவும்.
  • தாவர கழிவுகளை அகற்றி மண்ணிற்கு அடியில் புதைக்கவும் அல்லது எரித்து விடவும்.
  • புரவலன் அல்லாத தாவர வகைகளை கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க