சீமைவாதுழைப்பழம்

குண்டடி துளை (ஷாட் ஹோல்) நோய்

Wilsonomyces carpophilus

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • சிறிய ஊதா கலந்த கருப்புப் புள்ளிகள்.
  • புள்ளிகள் மையப்பகுதியில் பெரிதாகும்போது அவை வெளிர் பழுப்பு நிறமாக மாறும்.

இதிலும் கூடக் காணப்படும்

4 பயிர்கள்
பாதாம் பருப்பு
சீமைவாதுழைப்பழம்
சேலாப்பழம்/செர்ரி
குழிப்பேரி

சீமைவாதுழைப்பழம்

அறிகுறிகள்

ஆரம்ப அறிகுறிகள் வசந்த காலத்தில் தோன்றும் மற்றும் புதிய இலைகளிலும், எப்போதாவது தளிர்கள் மற்றும் மொட்டுகளிலும் ஊதா அல்லது சிவப்பு புள்ளிகள் ஏற்படுவது இந்நோயின் அறிகுறிகளாகும். இந்தப் புள்ளிகள் பெரும்பாலும் வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிற ஓரங்களால் சூழப்பட்டிருக்கும். இவை விரிவடையும் போது, அவற்றின் மையம் முதலில் பழுப்பு நிறமாகவோ அல்லது துருப்பிடித்த நிறமாகவோ மாறி, இறுதியில் அவை உதிர்ந்து, அந்த இடம் 'குண்டடி பட்ட துளை' போன்று காட்சியளிக்கும், இதன் மூலமே இந்நோய் இப்பெயர் பெற்றது. முன்கூட்டிய இலை உதிர்வு ஏற்படலாம். சிறுகிளைகளில் இறந்த மொட்டுகள், காயங்கள் அல்லது சொறிகள் போன்றவை கசிவுகளை ஏற்படுத்தலாம். பழங்களில், ஊதா நிற ஓரங்களுடன் கூடிய கரடுமுரடான மற்றும் தக்கை போன்ற காயங்கள்(சிதைவுகள்) மேற்பரப்பில் மட்டுமே பொதுவாகத் தோன்றும். இதனால் பழங்கள் கவரும்தன்மையை இழந்து, சந்தைப்படுத்த முடியாததாகவும் மாறும். சிறிய கருப்புப் புள்ளிகளை, சிதைவுகளின் நடுவில் உருப்பெருக்கி லென்ஸ் மூலம் காணலாம்..

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

குளிர்காலத்தின் தொடக்கத்தில் தாமிரத்தை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைத் தெளிப்பது நோய்க்கு எதிரான முதல் தற்காப்பாக இருக்கும். வீட்டில் தயாரிக்கப்பட்ட போர்டியாக்ஸ் கலவை அல்லது தாமிரத்தின் வணிகக் கலவைகளை வாங்கலாம். இலை உதிர்வை விரைவுபடுத்தவும், புதிய பருவம் தொடங்கும் முன் பூஞ்சையின் இருப்பைக் குறைக்கவும் இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் துத்தநாக சல்பேட் தயாரிப்பை இலைகளில் தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பழங்களைப் பாதுகாக்க, பூக்கும் காலத்துக்கு முன்னும் பின்னும், அதாவது இதழ்கள் உதிரும் பருவத்திலிருந்து மொட்டு துவங்கும் பருவத்தில் பூஞ்சைக் கொல்லிகளை தெளிக்கலாம். பூவைச் சுற்றி நிலவும் வானிலை தரவு, பழங்களைப் பாதுகாக்க ஸ்ப்ரேக்கள் தேவையா இல்லையா என்பதை சுட்டிக்காட்டும். இந்தக் கட்டத்தில் தாமிரம் பரிந்துரைக்கப்படுவதில்லை என்பதால், திரம், ஜிரம், அசோக்ஸிஸ்ட்ரோபின், குளோரோதலோனில், ஐப்ரோடியோன் ஆகியவற்றின் அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் வில்சோனோமைசஸ் கார்போபிலஸ் என்ற பூஞ்சையால் ஏற்படுகின்றன, இது பல வகை கடினமான பழங்களை (பீச், பாதாம், செர்ரி மற்றும் வாதுமை பழம்) பாதிக்கிறது. மாற்றுப் புரவலன்கள் இங்கிலிஷ் லாரல் மற்றும் நெக்டரைன்கள் ஆகும். பூஞ்சையானது மொட்டுகள் மற்றும் மரக்கிளைகளில் அல்லது காய்ந்த பழங்களில் உள்ள காயங்களில் குளிர்காலத்தைக் கடந்துவிடும். வானிலை சாதகமாக இருக்கும்போது, இவை மீண்டும் வளரத் தொடங்கி, வித்துக்களை உற்பத்தி செய்து, ஆரோக்கியமான திசுக்களுக்கு மழைச் சாரல் மூலம் பரவும். நீண்ட கால இலை ஈரப்பதம் (14-24 மணிநேரம் அல்லது அதற்கு மேல்) மற்றும் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஆகியவை பூஞ்சையின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் ஆரோக்கியமான மரங்களைத் தாக்கும் ஆற்றலுக்கு சாதகமாக இருக்கிறது. வெதுவெதுப்பு, மூடுபனி அல்லது மழை போன்ற சூழல் நிலவும் மழைக்காலம் மற்றும் கடுமையான வசந்தகால மழை ஆகியவை வித்துக்களின் உருவாக்கம் மற்றும் வெளியீட்டிற்கு சாதகமாக இருக்கும். இந்த நோய் உண்மையில் வசந்த காலத்தில் வழக்கத்திற்கு மாறான ஈரமான காலநிலையில் மட்டுமே கடினமான பழ மரங்களில் ஏற்படும்.


தடுப்பு முறைகள்

  • நீர்ப்பாசனத்தின் போது கீழ்ப்பகுதி இலைகளில் தண்ணீர் தெளிப்பதைத் தவிர்க்கவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என பழத்தோட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • இலைத்திரள்களுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்க, கத்தரித்துச் சீர்திருத்தம் செய்யும் முறைகளைப் பயன்படுத்தவும்.
  • நோய்த்தொற்று கண்டறியப்பட்டவுடன், நோயுற்ற கிளையை ஆரோக்கியமான திசுக்களில் சில சென்டிமீட்டர் விட்டு வெட்டுங்கள்.
  • வயல் பணிக்குப் பிறகு வெட்டும் கருவிகள் மற்றும் பிற உபகரணங்களை கிருமி நீக்கம் செய்யவும்.
  • வெட்டப்பட்ட கிளைகள் மற்றும் மரங்களை வயலில் இருந்து அகற்றி அழிக்கவும்.
  • மரத்தின் அருகே பூண்டு அல்லது வெங்காயத்தை நோய் விரட்டியாக வளர்க்கவும்.
  • மாற்றாக, மரப்பட்டையைச் சுற்றி ஆர்கானிக் தழைக்கூளம் கொண்டு தெளிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க