குழிப்பேரி

இலைச் சுருள் நோய்

Taphrina deformans

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைச் சிதைவு மற்றும் சிவப்பு நிறமாற்றம் காணப்படும்.
  • இலைகளில் பூஞ்சை வளர்ச்சி ஏற்படும்.
  • முன்கூட்டியே இலை உதிரும்.

இதிலும் கூடக் காணப்படும்

3 பயிர்கள்
பாதாம் பருப்பு
சீமைவாதுழைப்பழம்
குழிப்பேரி

குழிப்பேரி

அறிகுறிகள்

அறிகுறிகள் பொதுவாக இலை வெடித்த உடனேயே தோன்றும். இலைகள் தடிமனாகி, மரத்தின் வகையைப் பொறுத்து, மடங்கி, நொறுங்கிய அல்லது சுருண்டு, சிவப்பு நிறத்தில் இருந்து ஊதா வரையான நிறமாற்றத்துடன் கடுமையாக சிதைந்துவிடும். நோய்த்தொற்று அதிகரிக்கும்போது, ​​பாதிக்கப்பட்ட இலைகள் அவற்றின் மேற்பரப்பில் பூஞ்சை வளர்ச்சியின் விளைவாக வெள்ளை கலந்த சாம்பல் நிறத்தில் தூள் தோற்றத்தில் இருக்கும். மூடியிருக்கும் சாம்பல் படிப்படியாக கருப்பு நிறமாக மாறும், இந்தச் செயல்முறை அதிக பகல்நேர வெப்பத்தின்போது நடைபெறும். இறுதியில், நோயுற்ற இலைகள் இறந்து உதிர்ந்து, இலையுதிர்வு மற்றும் வீரிய இழப்புக்கு வழிவகுக்கும். பிறகு அதே வளரும் புள்ளியில் இருந்து புதிய இலைகள் முளைத்துவிடும். பட்டை அல்லது முழு தளிர்களின் பகுதிகளும் நோய்த்தொற்றுக்கு ஆளாகும்போது, அதாவது தாவர உட்புற திசுக்களில் பூஞ்சை பரவத் தொடங்கும் போது அது கருப்பாகிவிடும். அத்தகைய சந்தர்ப்பங்களில், வளரும் நுனிகள் பக்கவாட்டில் அசாதாரணமாக துளிர்விடும், அது துடைப்பம் போல உருவாகும். அதிக நோயுற்ற மரங்களில், பழங்களின் மேற்பரப்பு தோற்றத்தில் வியத்தகு மாற்றத்தைக் காட்டும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்தப் பூஞ்சையை திறம்பட எதிர்த்துப் போராட போர்டியாக்ஸ் கலவை போன்ற கரிம தாமிர சேர்மங்களைக் கொண்ட பூஞ்சைக் கொல்லி தெளிப்புகளைப் பயன்படுத்தலாம். இலையுதிர்காலத்தில் இலையுதிர்வுக்குப் பிறகு ஒரு முறையும், வசந்த காலத்தில் மொட்டுகள் உப்பத் தொடங்குவதற்கு முன்பும் சிகிச்சையைப் பயன்படுத்த வேண்டும். தாமிரத் தயாரிப்புகளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதால், மண்ணில் தாமிரம் சேரலாம், இது இறுதியில் மண்ணின் உயிரினங்களுக்கு நச்சுத்தன்மையாக மாறும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். காப்பர் ஆக்ஸிகுளோரைடு, குப்ரிக் ஹைட்ராக்சைடு, திரம், ஜிரம், கோரோதலோனில் அல்லது டிஃபெனோகோனசோல் ஆகியவற்றைக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். இலையுதிர்காலத்தில் இலையுதிர்வுக்குப் பிறகு ஒரு முறையும், வசந்த காலத்தில் மொட்டுகள் உப்பத் தொடங்குவதற்கு முன்பும் சிகிச்சையைப் பயன்படுத்த வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

டாஃப்ரினா டிஃபார்மன்ஸ் என்ற பூஞ்சைத் தாவரத் திசுக்களை காலனித்துவப்படுத்துவதால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இலையின் மேற்பரப்பில் உற்பத்தி செய்யப்படும் வித்துக்கள் மழைத் தூறல்களால் அடித்துச் செல்லப்பட்டு அல்லது பீச் கிளைகள் மற்றும் மொட்டுகள் மீது காற்றினால் வீசப்பட்டு, புதிய தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. வசந்த காலத்தில் மொட்டுகள் மலர்வதால், அடிக்கடி மழை பெய்யும் காலங்களில் வித்துக்கள் முளைக்கின்றன, இது விரியாத இலைகளையும் பாதிக்கின்றன. வித்து இலை மொட்டுக்குள் நுழையும் தருணத்திலிருந்து, தொற்று செயல்முறையை நிறுத்த பயனுள்ள எதிர் நடவடிக்கை எதுவும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் மழை பெய்யவில்லை என்றால், வித்துக்கள் செயலற்று இருந்து, சிறிதளவு நோய்த்தொற்றை ஏற்படுத்தும் அல்லது தொற்று எதனையும் ஏற்படுத்தாது. கோடை காலத்திலும், அதனைத் தொடர்ந்து வரும் குளிர்காலத்திலும் மொட்டு செதில்கள் அல்லது பட்டைகளில் உள்ள பிளவுகளில் கிடந்து, இவை இறுதியில் அடுத்த பருவத்தில் முளைக்கும். இந்தப் பூஞ்சை 16 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பநிலையில் மட்டுமே செயலில் இருக்கும், மேலும் இந்த குறைந்த வெப்பநிலையில் மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். டாஃப்ரினா டிஃபார்மன்ஸ் பீச் மற்றும் நெக்டரைன்கள், பாதாம் ஆகியவற்றையும் பாதிக்கிறது, மேலும் எப்போதாவது வாதுமை பழங்களையும் அலங்கார ப்ரூனஸ் வகைகளையும் பாதிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • மொட்டு உப்பத் தொடங்கும் கட்டத்தின்போது, மழை அல்லது மேல்நிலை நீர்ப்பாசனத்திலிருந்து தாவரங்களைப் பாதுகாக்கவும்.
  • ஒவ்வொரு ஆண்டும் மரத்தின் உச்சியை சீர்திருத்தம் செய்யவும், இது இலைத்திரள்களுக்கு முறையான காற்றோட்டத்தை வழங்கும்.
  • மிதமான அளவு உரங்களைப் பயன்படுத்துங்கள்.
  • மொட்டு உப்புவதற்கு முன் தாவர வலுவூட்டிகளைப் பயன்படுத்தவும்.
  • தாங்கும் திறன் கொண்ட வகைகளை நடவும், உதாரணமாக வெள்ளை சதைப்பற்றான வகைகள்.
  • வெளிப்படையாக பாதிக்கப்பட்ட இலைகள், காய்ந்துபோன பழங்கள் மற்றும் தளிர்கள் அனைத்தையும் அகற்றி அழிக்கவும்.
  • முடிந்தவரை, தொற்றுநோயைத் தடுக்க பிளாஸ்டிக் மூலம் தயார் செய்யப்பட்ட மழைமறை தயாரிப்பைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க