பச்சடிக்கீரை

அடிச்சாம்பல் நோய்

Peronosporales

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் - பின்னர் இவை பழுப்பு நிறத்தில் இறந்த திட்டுக்களாக மாறும்.
  • இலையின் அடிப்பாகத்தில், இந்தப் புள்ளிகளுக்கு அடியில் வெள்ளையிலிருந்து சாம்பல் வரையான நிறத்தில் பஞ்சைப் போன்ற பூச்சு உருவாகும்.
  • இலை உதிர்வு காணப்படும்.
  • இளம் தளிர்கள், மலர்கள் மற்றும் பழங்கள் குட்டையாகும் அல்லது இறந்து விடும்.
  • குன்றிய வளர்ச்சி தென்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


பச்சடிக்கீரை

அறிகுறிகள்

வளரும் இளம் இலைகளின் மேற்பரப்பில் வெவ்வேறு அளவுகளில் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும். புள்ளிகள் பின்னர் பெரிதாகி கோண வடிவிலாகி, நரம்புகளால் பிரிக்கப்படும். அவற்றின் மையம் பழுப்பு நிறத்தின் வெவ்வேறு நிறச் சாயல்களுடன் சிதைந்து காணப்படும். தொடர்ச்சியான சூடான ஈரப்பதமான இரவுகளுக்குப் பிறகு அடர்த்தியான வெள்ளை முதல் சாம்பல் நிற பஞ்சு போன்ற அடுக்கு புள்ளிகளின் அடிப்புறத்தில் உருவாகும், பின்பு வெயிலடிக்க ஆரம்பித்தவுடன் அவை மறைந்துவிடும். இளம் தளிர்களில் உள்ள இலைகள் உதிர்ந்து அல்லது குன்றிய வளர்ச்சியை அனுபவிக்கின்றன. இந்த நோய் பாதித்த பழங்கள் மற்றும் பிற தாவர பாகங்களையும் பாதிக்கிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அடிச்சாம்பல் நோயினைச் சமாளிக்க வணிக முறையில் உயிரியல் ரீதியான சிகிச்சைகள் கிடைக்கின்றன. லேசான பாதிப்பே இருக்கும் சந்தர்ப்பங்களில், வேறு எதுவும் செய்யாமல், வானிலை சரியாகும் வரை காத்திருப்பதே பெரும்பாலும் சிறந்தது. சில சந்தர்ப்பங்களில், நோய்த்தொற்றுக்கு முன் பயன்படுத்தும் கரிம பூஞ்சைக் கொல்லிகள், தாவாரங்கள் மாசுபடுவதைத் தவிர்க்க உதவும். இவற்றில், போர்டாக்ஸ் கலவை போன்ற செம்பு-அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகள் அடங்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பாதுகாப்பு பூஞ்சை கொல்லிகள், தாவர மாசுபாட்டைத் தடுக்க உதவலாம். ஆனால், அவை இலைகளின் கீழ்ப்பகுதியில் ஒழுங்காகத் தெளிக்கப்பட வேண்டும். டிதியோகார்பமேட்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். முதல் அறிகுறிகளைக் கண்டறிந்த உடனேயே, பூஞ்சைக் கொல்லியை உடனடியாக உபயோகப்படுத்த வேண்டும். நோய் தாக்கத்திற்கு பின் பொதுவாக பயன்படுத்தும் பூஞ்சைக் கொல்லிகளில் ஃபோசெட்டில்-அலுமினம், அஜாஃக்ஸிஸ்டிரோபின் மற்றும் ஃபெனிலமைட்ஸ் ஆகியவை அடங்கும் (எ.கா. மெட்டாலாக்ஸில்-எம்).

இது எதனால் ஏற்படுகிறது

இந்த அறிகுறிகள் பெரோனோஸ்போரேல்ஸ் இனத்தைச் சார்ந்த பூஞ்சைகளால் ஏற்படுகின்றன. இவை அடிக்கடி மழை பொழிவதாலும், வெது வெதுப்பான வெப்பநிலை (15-23° C) கொண்ட நிழல் சார்ந்த பகுதிகளிலும் மிகவும் சேதம் விளைவிக்கக் கூடியவை. இந்தப் பூஞ்சை மூலப் பயிர்களுக்கு பொருத்தமாகத் தம்மை மாற்றிக் கொள்கின்றன. அதாவது ஒவ்வொரு முக்கிய பயிரும் அதன் சொந்த பூஞ்சை இனத்தை வளர்த்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகளிலோ, தளிர்களிலோ, மண்ணிலோ, மாற்று மூலப் பயிரிலோ (பயிர்கள் மற்றும் களைகள்) பூஞ்சைகள் குளிர் காலத்தைக் கழிக்கிறது. சாதகமான சூழ்நிலையில், காற்றும், மழையும் வித்துகளைப் பரப்புகின்றன. வித்துகள் முளைத்து, இலைகளின் இயற்கை துளைகளின் மூலமும், அடிப்புறங்களிலிருந்து நுழையும் அமைப்புகளை உருவாக்கும். அங்கு அது திசுக்கள் வழியாக பரவுவதில் தொடங்கி, இறுதியில் உட்புற திசுக்களை விடப் பெரிதாக வளர்ந்து, அதன் இயல்பான சாம்பல் போன்ற பூச்சை வெளிப்புறத்தில் உருவாக்குகிறது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தி கொண்ட வகைகள் கிடைக்கும் என்றால், அவற்றைத் தெரிவு செய்யவும்.
  • தாவரங்களை உலர்வாக வைக்கவும், உதாரணமாகச் சரியான காற்றோட்டம் மூலம் இதைச் செய்யலாம்.
  • மண்ணில் நல்ல வடிகால் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • தாவரத்தின் வீரியத்திற்கு சமச்சீரான முறையில் உரமிடுதலை உறுதி செய்யவும்.
  • தாவரங்களுக்கு இடையில் நல்ல இடைவெளி விடவும்.
  • சூரியன் நன்கு படும் நிலங்களையும், சரியான நோக்கு நிலையையும் தேர்வு செய்து பயிரிடவும்.
  • வயலிலும் அதைச் சுற்றியும் களைகளை கட்டுப்படுத்துங்கள்.
  • வயலில் இருந்து தாவர மிச்சங்களை அகற்றவும்.
  • கருவிகளையும் உபகரணங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
  • பாதிக்கப்பட்ட மண் மற்றும் தாவர பொருட்கள் பரவுவதை தவிர்க்கவும்.
  • தாவரத்தின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்துவதற்கு வலுவூட்டிகளைப் பயன்படுத்தலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க