பராமரிப்பு
பென்னிசெட்டம் கிளாகம் (கம்பு) மிகவும் பரவலாக பயிர் செய்யப்படும் தினை வகையாகும். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பயிர் வகைக்கு பெயர் பெற்றது; மேலும் வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற கடுமையான வானிலை சூழல்களைத் தாங்கும் திறன் கொண்டது. தானியங்கள் மனிதர்கள் உண்ணுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன, மீதமுள்ள பயிர் தீவனமாக பயன்படுத்தப்படுகின்றன.
மண்
கம்பு தினை குறைந்த மண் வளம் மற்றும் அதிக உப்புத்தன்மை அல்லது குறைந்த ஹைட்ரஜன் அயனிச்செறிவு உள்ள பகுதிகளில் வளரக்கூடியது, இது மற்ற பயிர்களுக்கு ஒரு நல்ல மாற்றாக அமைகிறது. அலுமினிய உள்ளடக்கம் அதிகம் உள்ள அமில அடி மண்ணையும் கூட இதனால் தாங்கிக்கொள்ள முடியும். இருப்பினும், நீர் தேங்கி நிற்கும் மண் அல்லது களிமண் போன்றவற்றை இது தாங்கிக் கொள்ளாது.
தட்பவெட்பநிலை
வறட்சி மற்றும் அதிக வெப்பநிலை உள்ள பகுதிகளில் கம்பு தினையை பயிரிடலாம். தானியங்கள் முதிர்ச்சியடைய அதிக பகல்நேர வெப்பநிலை இவற்றுக்கு தேவை. இந்த பயிருக்கு வறட்சிக்கான எதிர்ப்புத்திறன் இருக்கும்போதும், பருவம் முழுவதும் சமமான மழைப்பொழிவு தேவைப்படுகிறது.