மாங்கனி

பாசி இலைப்புள்ளி நோய்

Cephaleuros virescens

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் உரோமம் போன்ற, பச்சை முதல் ஆரஞ்சு நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • இளம் தண்டுகளின் பட்டைகளில் பிளவுகள் காணப்படும்.
  • இலை உதிர்வும் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


மாங்கனி

அறிகுறிகள்

ஒட்டுண்ணி பாசி சி. விரேசென்ஸ் மாம்பழம் மற்றும் பிற புரவலன்களின் இலைகளை அதிகமாகப் பாதிக்கிறது, ஆனால் இவை கிளைகள் மற்றும் தண்டுகளையும் பாதிக்கக்கூடும். பாதிக்கப்பட்ட இலைகளில் வட்ட வடிவில், சற்று உயர்ந்த, பச்சை முதல் ஆரஞ்சு நிறத்தில் 2-4 மிமீ விட்டம் கொண்ட புள்ளிகள் காணப்படும். இவை உரோமத் தோல் போன்ற வளர்ச்சி (பாசியின் வித்துக்கள்) மற்றும் தெளிவில்லாத ஓரங்கள் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. இவைத் திட்டு போன்ற பகுதிகளாக ஒன்றிணையக்கூடும். அதிக நோய் பாதிப்பு ஏற்ப்படக்கூடிய வாய்ப்புகள் கொண்ட இளம் தண்டுகளில், சி.விரேசன்ஸ் தண்டுகளில் பிளவுகளை ஏற்படுத்தி, கருகல் நோய்க்கு வழிவகுக்கும். பல மரங்களில், கீழே தொங்கும் கிளைகளில் மோசமான அறிகுறிகள் தென்படும். அதிக வெப்பநிலை மற்றும் மழை பெய்யும் பகுதிகள் மற்றும் பலவீனமான வளர்ச்சி கொண்ட தாவரங்களில் பாசி இலைப்புள்ளி நோய் பொதுவாக ஏற்படுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய் லேசானதாக இருந்தால், புள்ளிகளைக் கொண்ட இலைகள் மற்றும் நோயுற்ற கிளைகளை நீக்கி மற்றும் அழிக்கவும். கூடுதலாக, தரையில் கிடைக்கும் பாதிக்கப்பட்ட இலைகளைக் கிளறி மற்றும் அழித்துவிடவும். பாசி இலைப் புள்ளி நோய் கடுமையானதாக இருந்தால், போர்டாக்ஸ் கலவை அல்லது மற்ற செப்பு சார்ந்த தயாரிப்புகளைத் தெளிக்கவும். கோடைகாலம் ஆரம்பித்ததிலிருந்து, இலையுதிர்காலம் முடியும் வரை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதனைத் தெளிக்க வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இரசாயனக் கட்டுப்பாடு தேவைப்பட்டால் தாமிரம் கொண்ட பூஞ்சைக்கொல்லித் தெளிப்பான்களைப் பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

அதிக வெப்பநிலை மற்றும் மழை பெய்யும் பகுதிகள் மற்றும் சரியாக வளர்ச்சி அடையாத புரவலன் தாவரங்களில் பாசி இலைப்புள்ளி நோய் பொதுவாக ஏற்படுகிறது. குறைந்த ஊட்டச்சத்து, மோசமான மண் வடிகால், மற்றும் மிக அதிக அல்லது மிக குறைவான நிழல் பகுதி போன்ற சூழல்கள் இந்த நோய்க்குச் சாதகமானதாகும். வித்துக்கள் முளைப்பதற்குத் தண்ணீர் தேவை. மழைச் சாரல் அல்லது காற்று வழியாக இது பிற மரங்களுக்குப் பரவுகிறது. சி.விரேசன்ஸ் புரவலன்களின் தண்ணீர் மற்றும் கனிம உப்புகளை உண்பதால், 'நீர் ஒட்டுண்ணி' போல் வகைப்படுத்தப்படுகிறது. இலைகள் உதிரும் வரை அவற்றை பாசி மூடிக்கொள்ளும். அடிக்கடி பெய்யும் மழையால் இளமையான மேலோட்டமான காலனிகள் அடித்துச் செல்லப்படும். காயங்கள் வழியாக இலையினுள் செல்லும் வித்துக்கள் மட்டுமே காயங்களை ஏற்படுத்தும். வெட்டுக்கள் இல்லாத புறத்தோலில் நோய் பரவியதற்கான ஆதாரம் இல்லை.


தடுப்பு முறைகள்

  • வரிசைகளை சரியான முறையில் அமைத்து நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்து கொள்ளவும்.
  • தாவர அழுத்தத்தைக் குறைக்க வளரும் சூழ்நிலைகளை மேம்படுத்தவும்.
  • மேம்பட்ட வடிகால் மூலம் மண்ணில் நீர் தேங்கி நிற்பதை தவிர்க்கவும்.
  • இலைத்திரள்கள் விரைவாக உலர்வதை உறுதிப்படுத்தும் வகையில் காலையில் சீக்கிரமே நீர்ப்பாசனம் செய்யவும்.
  • சாத்தியமான சூழலில் மேல்நிலை நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும்.
  • வளர்ச்சி குறைவாக இருக்கும் போது கனிம உரங்களைச் சேர்க்கவும்.
  • பொட்டாசியம் பாஸ்பேட் கொண்ட தெளிப்பான்களைப் பயன்படுத்தவும்.
  • நல்ல காற்றோட்டத்துடன் இலைகள் மற்றும் பழங்கள் விரைவாக உலரும் அளவிற்கு தாவர அடர்த்தி இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
  • ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஈரப்பதத்துக்கான தட்டுப்பாட்டைக் குறைக்க மரங்களைச் சுற்றியுள்ள களைகளை அகற்றவும்.
  • இயந்திரக் கருவிகளால் ஏற்படும் காயங்களைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க