கத்திரிக்காய்

கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான்

Leucinodes orbonalis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மலர்கள் மற்றும் மொட்டுகளில் பூச்சிகள் உண்ணும் அறிகுறிகள் காணப்படும்.
  • இளந்தளிரின் நுனிகள் மற்றும் தண்டுகள் வாடிப்போகும்.
  • பழங்களில் நுழையும் மற்றும் வெளியேறும் துளைகள் காய்ந்த கழிவுகளால் மூடப்பட்டிருக்கும்.
  • சதைகளால் நிரப்பப்பட்ட வெறுமையான பழங்கள் பூச்சிக்கழிவுகளால் நிரப்பப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


கத்திரிக்காய்

அறிகுறிகள்

தென்படக்கூடிய முதல் அறிகுறியானது முட்டைப்புழுக்கள் உண்ணுவதால் வாடிப்போகும் தண்டு நுனிகளாகும். பின்னர் மலர்கள், பூ மொட்டுகள் மற்றும் தண்டுகள் பாதிக்கப்படுகின்றன. பெரிய இலைகள் மற்றும் மென்மையான தளிர் ஆகியவற்றின் மையநரம்பின் முனை வழியாக இளம் முட்டைப்புழுக்கள் துளையிட்டு, தண்டுகளுக்கு ஊடுருவி "இறந்த இதயங்களை" உண்டாக்குகின்றன. முதிர்ச்சியான முட்டைப்புழுக்கள் பழங்களை துளையிட்டு, காய்ந்த கழிவுகளால் மூடப்பட்ட சிறு துளையினை விட்டுச்செல்லும். பழங்களின் உட்புறம் வெற்றாகி, நிறமாறி, கழிவுகளால் நிரப்பப்படும். கடுமையான நோய்த்தொற்றின் போது தாவரங்கள் வாடி, பலவீனமாகி, விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும். அந்த தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் உண்ண முடியாமல் போய்விடும். கணிசமான நோய்ப்பூச்சிகளின் எண்ணிக்கை பல தலைமுறைகளை உருவாக்கும்போது, சேதங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பல ஒட்டுண்ணிகள் எல். ஆர்போனலிஸ் முட்டைப்புழுக்களை உண்ணுகின்றன. உதாரணமாக, ப்ரிஸ்டோமரஸ் டெஸ்டாசியஸ், க்ரீமாஸ்டஸ் ஃபிளார்வூபிடாலிஸ், மற்றும் ஷிராக்கியா ஸ்கூொனாபிக். சூடோபெரிச்சீட்டா, ப்ரகோனிட்ஸ், மற்றும் ஃபானெரோடோமாவின் உயிரினங்கள் வயல்களில் ஊக்குவிக்கப்பட வேண்டும் அல்லது அறிமுகப்படுத்தப்பட வேண்டும். வேம்பு விதையின் உட்கரு சாறு (என்.எஸ்.கே.ஈ) 5% அல்லது ஸ்பினோசட் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட பழங்கள் மீது பயன்படுத்தலாம். முட்டைகள் இடுவதை தவிர்ப்பதற்கு பசை போன்ற ஒட்டும் பொருள் கொண்ட வலைகளை கரை போன்று 10 செமீ அளவிற்கு மேலே விளிம்பில் பயன்படுத்தலாம். பசை கிடைக்கவில்லையெனில், 2 மீ உயரத்திற்கு 40 செ.மீ நீளத்திற்கு நீட்டி, பின்னர் 80-85 டிகிரி கோணத்தில் செங்குத்து வலைக்கு எதிராக வெளியே கொண்டு வந்து கீழே இறக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நோய்த்தொற்றின் வளர்ச்சி நிலை மற்றும் பருவங்களை பொறுத்து சிகிச்சைகள் மாறுபடும். வழக்கமான இடைவெளியில் செவிமால் (0.1%) அல்லது மாலத்தியான் (0.1%) போன்றவற்றை தெளித்தல், நோய்தொற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். செயற்கை பைரித்ராய்ட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், பழம் முதிர்ச்சியடையும் போது மற்றும் அறுவடையின் போது பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதமானது அந்துப்பூச்சி லுசினோட்ஸ் ஆர்போனலிஸ் என்னும் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. வசந்த காலத்தில், பெண்பூச்சிகள் பாலாடை-வெள்ளை முட்டைகளை நிற தனித்தனியாக அல்லது கொத்துகளாக இலைகளின் கீழ்ப்பகுதி, தண்டுகள், பூ மொட்டுகள் அல்லது பழத்தின் அடிப்பகுதியில் இடும். 3 முதல் 5 நாட்களுக்குப் பிறகு முட்டைப்புழுக்கள் அதிலிருந்து வெளிவந்து, பழங்களை நேரடியாக துளையிடும். முற்றிலும் வளர்ச்சியடைந்த முட்டைப்புழுக்கள் உறுதியாக, இளஞ்சிவப்பு நிறத்தில் பழுப்பு நிற தலைப்பகுதியைக் கொண்டிருக்கும். உண்ணுதல் நிறைவடைந்த பிறகு, தண்டுகள், உலர்ந்த தளிர்கள் அல்லது விழுந்த இலைகளின் மீது சாம்பல் நிற, கடினமாக நெய்யப்பட்ட கூட்டில் அவை கூட்டுப்புழுவாக மாறும். முட்டைப்புழுவின் நிலை சுமார் 6 முதல் 8 நாட்கள் நீடிக்கும், பின்னர் அதிலிருந்து முதிர்ந்த பூச்சிகள் வெளியேறும். சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து 21-43 நாட்கள் நீடிக்கும் வாழ்க்கைச் சுழற்சி நிறைவடைந்த பின், முதிர்ந்த பூச்சிகள் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை வாழ்கின்றன. ஓராண்டிற்கு செயல்படும் நிலையில் ஐந்து தலைமுறைகள் வரை இருக்கக்கூடும். குளிர் காலத்தில் முட்டைப்புழுக்கள் மண்ணுக்குள் செயலற்ற நிலையில் இருக்கும். இந்த புழுக்கள் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பல சொலாநேசியஸ் தாவரங்களை உண்ணும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைக்கப்பெற்றால், சகிப்புத்தன்மை மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • சாத்தியமானால், இரண்டு பருவங்களுக்கு பெருஞ்சீரகம், ஓமம், கொத்தமல்லி மற்றும் நிகெல்லா போன்ற பிற இன பயிர்களுடன் நோய்பாதிப்பு ஏற்படக்கூடிய பயிர்களை ஊடுபயிர் செய்யவும்.
  • நோய்பூச்சிகளின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என பயிர்செய்யும் வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள், தளிர்கள் அல்லது பழங்களை வயலில் இருந்து அகற்றி வயலுக்கு அப்பால் கொண்டு சென்று அழிக்க வேண்டும்.
  • விழுந்த பழங்கள், இலைகள், தளிர்கள் ஆகியவற்றிலிருந்து நிலங்களை சுத்தமாக வைத்திருங்கள்.
  • அதிகமான தொற்றுநோய் ஏற்பட்டால், முழு செடியையும் வேரோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும்.
  • மற்ற பயிர்கள் அல்லது வயல்களுக்கு அந்துப்பூச்சிகள் பரவுவதை தடுக்க நைலான் வலை தடுப்புகளை பயன்படுத்தவும்.
  • இனச்சேர்க்கையை தூண்டும் இயக்குநீர் பொறிகளை பயன்படுத்தி அந்துப்பூச்சிகளைப் பிடிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க