கரும்பு

கரும்பு துளைப்பான் நோய்

Diatraea saccharalis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • கரும்புத் தண்டுகளின் திசுக்களில் துளைப்பான்கள் ஊட்டம் பெறுகின்றன.
  • அனைத்து பயிர்களிலும் ஓட்டைகள் காணப்படும்.
  • முதிர்ந்த பயிர்கள் சாய்ந்து அல்லது உடைந்து விடக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்


கரும்பு

அறிகுறிகள்

இளம் உயிரிகள் ஊட்டம் பெறுவதால் கரும்புத் தண்டுகளில் "குண்டூசி ஓட்டைகள்" மற்றும் துளைகள் போன்ற சேதங்கள் ஏற்படுகின்றன. இளம் பயிர்களில் தண்டுகளின் உட்புற திசுக்கள் உண்ணப்படும், இதனை இறந்த இதய அறிகுறி என்று அழைப்பர். முதிர்ந்த பயிர்களில் இளம் உயிரிகள் தானாகவே துளையிட்டு, இலை உறைகள் மற்றும் இலைகளின் மொட்டுகளுக்குள் செல்லும். இளம் உயிர்கள் வளருகையில், தண்டுகளில் குடைவுகளை ஏற்படுத்துகின்றன. அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர்கள் பலவீனமாகி,அவற்றின் வளர்ச்சி குன்றும், சிலவேளைகளில் வானிலை சூழல்கள் சரிவர அமையாவிடில், தண்டுகள் சாய்ந்து அல்லது உடைந்து விடக்கூடும். பயிர்கள் முழுவதும் ஓட்டைகள் காணப்படும். மகசூல் மற்றும் கரும்புச்சாறின் தரம் குறைந்துவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கரும்பு விதைகளை 25.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட நீரில் சுமார் 72 மணி நேரம் வைத்து 27-100% வரையிலான துளைப்பான் முட்டைகளை அழிக்கலாம். இந்த சிகிச்சையினால் விதையின் முளைக்கும் திறன் தடைபடுவதில்லை, மற்றும் மூழ்கிய கரும்பு விதைகள் சிறந்த கரும்புகளை உற்பத்தி செய்யும். பலவிதமான இயற்கை எதிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகளைக் கொண்டு துளைப்பான்களின் எண்ணிக்கையினைக் குறைக்க இயலும். எறும்புகளை, முக்கியமாக செவ்வெறும்புகளை பயன்படுத்தவும் அல்லது டிரைகோக்ராமா ஒட்டுண்ணி குளவிகளைப் பயன்படுத்தி முட்டைகளின் எண்ணிக்கையினைக் குறைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பொருளாதார அடிப்படையில் அதிகப்படியாக சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க பயிர்களை தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும். குளோரான்ட்ரானிலிப்ரோல், ஃப்ளுபென்டியமைட் அல்லது பூச்சிகளின் வளர்ச்சி கட்டுப்படுத்திகள் அடங்கிய பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி தண்டுகளை துளையிடும் முதிர்ந்த பூச்சிகளைத் தடுக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

வெப்பநிலை துளைப்பான்களின் வாழ்க்கைச் சுழற்சி காலத்தினை தீர்மானிக்கின்றன. முட்டைப்புழுக்களின் வளர்ச்சி சூடான வெப்பநிலையில் 25 முதல் 30 நாட்களும், குளிர்ந்த வெப்பநிலையில் சுமார் ஐந்து நாட்களும் ஆகும். குளிர்காலத்தில் அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் குறைந்த வெப்பநிலை துளைப்பான்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும். சூடான வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு போன்றவை துளைப்பான்கள் உயிர்வாழ மற்றும் வளர ஏதுவான சூழ்நிலைகளாகும். லேசாக நிலத்தை உழும் வேளாண் நடைமுறைகள் நோய்ப்பூச்சிகள் எஞ்சிய பயிர் கழிவுகளில் தனது குளிர்காலத்தை கழிக்க உதவும். குறைவான இயற்கை எதிரிகள் இருப்பதும் இதற்கு ஏதுவானதாக அமைகிறது. அதிகப்படியான நைட்ரஜன் பயன்பாடு பூச்சிகளின் உயிர்வாழ்வுத் தன்மைக்கு ஆதரவாக அமையும்.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத் தன்மை மற்றும் தடுப்புவகை கொண்ட பயிர்களை பயிரிடவும்.
  • துளைப்பான்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விதைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • துளைப்பான்களிடம் இருந்து பாதுக்காத்துக் கொள்ளவும், அவற்றினால் ஏற்படும் காயங்களைக் குறைக்கவும் மண்ணில் சிலிக்கானை சேர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட கரும்புகளை எரித்துவிடுவதன் மூலம் துளைப்பான்களின் எண்ணிக்கையினைக் குறைக்கலாம்.
  • அறுவடை முடிந்த உடனே பயிர்களின் எஞ்சிய பகுதிகளை எரித்தல், உழுதல் அல்லது அதிகப்படியான நீர் கொண்டு அழித்தல் போன்றவற்றின் மூலம் அழித்துவுடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க