மற்றவை

மத்தியதரைகடல் சார்ந்த பழ ஈ

Ceratitis capitata

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பழங்களில் பெண் ஈக்கள் முட்டையிட்ட இடங்களில் துளையிட்ட அறிகுறிகள் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட பழங்கள் முதிரும் மற்றும் முதிர்ச்சியடைவதற்கு முன்னரே அழுகிவிடும் அல்லது கீழே விழுந்துவிடும்.
  • துளையிட்ட அல்லது பழக் கசிவுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் சந்தர்ப்பவாதப் பூஞ்சைகள் வளரக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

14 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

மற்றவை

அறிகுறிகள்

தாக்கப்பட்ட பழங்களில், பெண் ஈக்களால் முட்டையிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகே துளையிட்டதற்கான அறிகுறிகள் தென்படும். பாதிக்கப்பட்ட பழம் முதிரும் மற்றும் முதிர்ச்சியடைவதற்கு முன்பே அழுகக்கூடும், மேலும் இவை சர்க்கரைச் சாறு போன்ற துளிகளை வெளியேற்றலாம் மற்றும் சில நேரங்களில் கீழே விழக்கூடும். துளையிட்ட பகுதிகள் அல்லது பழக் கசிவு ஏற்படும் பகுதிகளுக்கு அருகே சந்தர்ப்பவாதப் பூஞ்சைகள் வளரக்கூடும். ஈக்கள் கருப்பு நிறப் புள்ளிகளுடன் வெள்ளி நிற மார்புப்பகுதிகளைக் கொண்டிருக்கும், இருண்ட கோடுகள் கொண்ட ஒரு பழுப்புநிற வயிறையும், வெளிர் பழுப்பு நிற பட்டைகள் மற்றும் சாம்பல் நிறப் புள்ளிகளுடைய தெளிவான இறக்கைகளையும் கொண்டிருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சில ஒட்டுண்ணி பூச்சிகள் மற்றும் இரைப்பிடித்துண்ணிகளை பயன்படுத்தும் சில உயிரியல் கட்டுப்பாடுகள் நல்ல பலனைக் கொடுக்கும். பல வகையான ஒட்டுண்ணி பூஞ்சைகள் (பிறவற்றுக்கு மத்தியில் பெவெரியா பாசியானா) மற்றும் சில நூற்புழுக்களாலும் செராடிடிஸ் கேப்டிடேட்டா பாதிக்கப்படக்கூடும். சிகிச்சையின் விளைவு பாதிக்கப்பட்ட பயிரை (அல்லது பழத்தை) பெரிதும் சார்ந்துள்ளது. சூடான நீராவி (எடுத்துக்காட்டாக 8 மணிநேரத்திற்கு 44 ° செல்சியஸ்), சூடான நீர் மற்றும் அழுத்தமான வெப்ப காற்று மற்றும் குளிர் சிகிச்சைகள் போன்ற பல்வேறு வகையான சிகிச்சைகள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பழங்கள் மீது பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சைகள் சேமிப்பு, போக்குவரத்து அல்லது இரண்டிலும் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், அவை அனைத்தும் பெரும்பாலான பழங்களின் ஆயுட்காலத்தை குறைக்கின்றன. பயிர்களை பாதுகாக்க ஸ்பினோஸாட் என்பவற்றை உரிய காலத்தில் தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பழங்களைப் பாதுகாக்க பூச்சிக்கொல்லிகளில் பழங்களை மூழ்கியெடுத்தல் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும். பயிர்களின் மீது பாதுகாப்பு தெளிப்பான்களும் சிகிச்சை முறைகளாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இவை விலை உயர்ந்தவை. ஒரே பொறியில் பொருத்தமான பூச்சிக்கொல்லி (மாலத்தியான்) உடன் ஆண் மற்றும் பெண் இருவரையும் ஈர்க்கும் புரோட்டீன் பொறிகளைக் கொண்ட, பொறித் தெளிப்பான்களும் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை முறையாகும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது செராடிட்டிஸ் கேபிடேட்டா என்னும் மத்தியத் தரைக்கடல் சார்ந்த ஈயின் முட்டைப்புழுக்களின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. இந்த நோய் இப்பெயர் பெற்றாலும், இது துணை-சஹாரா ஆப்பிரிக்கா பகுதியிலும் ஏற்படுகிறது மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியைத் தவிர அது மத்திய கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது. பெண் ஈக்கள் பழுத்த பழங்கள் அல்லது பெர்ரிக்களின் மென்மையான தோலை துளையிட்டு, தோலுக்கு அடியில் துளையினுள் முட்டையிடும். முட்டை பொறிந்த பிறகு, முட்டைப்புழுக்கள் பழக் கூழினை உண்டு, பொதுவாகக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி அவற்றை உண்ண முடியாமல் ஆக்கிவிடுகிறது. இது பல தீனிகளை உண்ணும் பூச்சியாகும், இது பல்வேறு வகையான புரவலன்களை உண்ணுகிறது. பிடித்த தாவரங்கள் அருகில் இல்லை என்றால், இது புதிய புரவலன்களை எளிதில் தொந்தரவு செய்யக்கூடும். பாதிக்கப்பட்ட பழங்களில் இவை வளர சந்தர்ப்பவாதப் பூஞ்சைகளைப் பரப்புவதாகவும் சான்றுகள் உள்ளன. இது பல மாறுபட்ட சூழல்களில் செழித்து வளரக்கூடிய மிகுந்த அளவில் ஊடுறுவும் இனங்கள், மற்றும் இது ஒப்பீட்டளவில் பரந்த வெப்பநிலையில், 10 முதல் 30° செல்சியஸ் வரையிலான உகந்த வரம்பைக் கொண்டுள்ளது.


தடுப்பு முறைகள்

  • இந்தப் பூச்சிகள் பழத்தோட்டங்களில் கண்டறியப்பட்டால், தயவு செய்து நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
  • பூச்சியை கண்டறிய பூச்சி-கண்காணிப்பு பொறிகளை அல்லது பெரோமோன் பொறிகளை நிறுவவும்.
  • பூச்சியைக் கண்டறிந்த பிறகு விரைவாக பொறுப்பான அதிகாரியிடம் புகார் செய்யவும்.
  • அந்தப் பகுதியில் இருந்து ஏதேனும் பாதிக்கப்பட்ட பழத்தை நகர்த்த வேண்டாம்.
  • ஏற்றுமதிக்கான பழங்களைக் காகிதத்தில் அல்லது பாலிதீன் உறைகளில் சுற்றவும்.
  • அனைத்து பாதிக்கப்பட்ட பழங்களையும் சேகரிக்க இரட்டைப் பையில் போட்டு குப்பைத் தொட்டியில் போட்டுவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க