சோளம்

சோளம் கொசுவினப்பூச்சி

Stenodiplosis sorghicola

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • வெறுமையான அல்லது சிறிய சோளத்தினைக் கொண்ட சோளத் தட்டுக்கள், அதன் நுனியில் சிறிய, கண்ணாடி போன்ற, கொசுவினப்பூச்சியின் கூட்டுபுழு தோல்களை கொண்டிருக்கும்.
  • கதிர்களின் நிறம் வெளுத்தது போன்று அல்லது வெடித்தது போன்று காட்சியளிக்கும்.
  • அவற்றினை நசுக்கினால், கொசுவினப்பூச்சியின் முட்டைப்புழு அல்லது கூட்டுப்புழுவின் உடலில் இருந்து, சிவப்பு நிறத்திலான கசிவுகள் ஒழுகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோளம்

அறிகுறிகள்

இளம் உயிரிகள் வளரும் தானியங்களின் உமியில் இருந்து ஊட்டத்தினைப் பெற்று தானியங்களின் வளர்ச்சியினை தடுத்து நிறுத்துகின்றன. இதனால் விதைகளில் சுருக்கம் மற்றும் மாற்று தோற்றம், காலியான தானியங்கள் மற்றும் பதர்கள் போன்றவை ஏற்படுகின்றன. முதிர்ந்த பயிரில், பாதிக்கப்பட்ட கதிர்கள் கருகிய அல்லது வெடித்த தோற்றத்தை கொண்டிருக்கும். பாதிக்கப்பட்ட சோளத் தட்டுக்கள், அதன் நுனியில் சிறிய, கண்ணாடி போன்ற, கொசுவினப்பூச்சியின் கூட்டுபுழு தோல்களை கொண்டிருக்கும். அவற்றினை நசுக்கினால், கொசுவினப்பூச்சியின் முட்டைப்புழு அல்லது கூட்டுப்புழுவின் உடலில் இருந்து, சிவப்பு நிறத்திலான கசிவுகள் ஒழுகும். அதிகப்படியான தாக்குதல்களில் முழு சோளத்தட்டுக்களுமே காலியாக காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

யூபெல்மஸ், யூபெல்மிடே, டெட்ராஸ்டிகஸ் மற்றும் அபோஸ்டோசெடஸ் (ஏ.டிப்லோசிடிஸ், ஏ.கோயம்ஹாடோரென்ஸிஸ், ஏ.காலா) போன்ற சிறிய கருப்பு நிற ஒட்டுண்ணி குளவி இனங்கள் சோள ஈக்களின் இளம் உயிரிகளை அழிக்கவல்லவை. எனவே இவற்றினை வயல்வெளிகளில் பயன்படுத்தி பூச்சிகளின் எண்ணிக்கையினைக் குறைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். சோளத்தட்டுக்களில் இளம் உயிரிகள், அவற்றின் முட்டைகள் மற்றும் ஈக்கள் பாதுகாப்பாக இருப்பதால் வேதியியல் கட்டுப்பாடு சற்று கடினமான விஷயம். காலையில் பூக்கள் பூக்கும்போது முதிர்ந்த ஈக்கள் வெளிவரும் நேரத்திற்கு ஏற்ப பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. மற்ற பொழுதுகளில் இது சரியான பலனை அளிப்பதில்லை. குளோர்பைரிஃபோஸ், சைஃப்லுத்ரின், சைதலோத்ரின், எஸ்ஃபென்வாலெரடெ, மாலதியான் அல்லது மெதோமைல் போன்றவை கலந்த பொருளை பயன்படுத்தலாம். அறுவடைக்குப் பின்னர், சோளம் பாஸ்பைனுடன் இணைத்து புகையூட்டல் சோளத்தட்டுகளில் உள்ள உயிரிகளை அழிக்கும். இது புதிய பகுதிகளுக்கு பூச்சிகள் பரவுவதைத் தவிர்க்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது முக்கியமாக ஸ்டெனோடிப்லோசிஸ் சோர்கிகோலா என்னும் கொசுவினப்பூச்சியின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகின்றன. முதிர்ந்த பூச்சிகள் கொசு போன்ற தோற்றத்துடன் இருக்கும், இவை பிரகாசமான ஆரஞ்சு உடல், தெளிவாக தெரியும் இறக்கைகள் மற்றும் வெகு நீண்ட உணர்வு கொம்புகள் போன்றவற்றை கொண்டிருக்கும். வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகமாகும்போது, அவை தானியத்தில் இருந்து வெளியேறி, உடனடியாக ஒரு மணிநேரத்திற்குள் தனது துணையினைத் தேடிக்கொள்ளும். அடுத்த குறுகிய காலத்திற்குள்ளாகவே, பெண் பூச்சிகள் சுமார் 1 முதல் 5 வரையிலான சிறிய, கோளவடிவமான முட்டைகளை பூக்களில் இடுகின்றன. முட்டைகள் 2 முதல் 3 நாட்களில் பொறிந்துவிடுகின்றன. அதிலிருந்து வண்ணமற்ற இளம் உயிரிகள் வெளிவந்து, வளரும் பயிர்களின் மென்மையான திசுக்களில் இருந்து ஊட்டம்பெற்று அவை வளரத் தொடங்குகின்றன. 10-15 நாட்கள் தொடர்ந்து ஊட்டம் பெற்ற இந்த பூச்சிகள், முதிர்ந்த அடர் ஆரஞ்சு வண்ண முட்டைப்புழுக்கள் தானியங்களினுள் 3 - 5 நாட்களில் கூட்டுப்புழுவாக மாறும். பின்னர் முதிர்ந்த பூச்சிகளாக இவை வெளிவந்து, இதே சுழற்சி முறையினைப் பின்பற்றும். அறுவடைக்குப் பின்னரும், ஈக்கள் தானியங்களில் தங்கியிருந்து தனது வளர்ச்சி தடைக்காலத்தினை மேற்கொள்ளும், இது சுமாராக 3 ஆண்டுகள் வரை இவ்வாறு வாழும் தன்மையுடையது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைக்கும், தடுப்பு வகை அல்லது நெகிழ்திறன் கொண்ட பயிர்களை பயிரிடவும்.
  • அதே நேரம் மற்றும் ஆழத்தில் ஒன்றுபோல் அனைத்து சோளப் பயிர்களையும் பயிரிடவும்.
  • பருவ காலத்திற்கு முன்னதாகவே பயிரிடவும்.
  • மாற்று புரவலன்களான காட்டுச் சோளம், ஜான்சன் புல் மற்றும் சூடான் புல் போன்ற பயிர்களை நிலத்தில் மற்றும் நிலத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நீக்கிவிடவும்.
  • நிலத்தினை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும்.
  • பாதிக்கப்பட்ட சோளத்தட்டுக்களை பயிரிலிருந்து நீக்கி பிறவற்றிற்கு பரவுவதைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் பயிர்களின் எஞ்சிய பாகங்களை நீக்கவும் அல்லது எரிக்கவும்.
  • சிறந்த பயிர்களுடன் (பருத்தி, நிலக்கடலை, சூரிய காந்தி அல்லது கரும்பு) மறுபயிரிடலை செயல்படுத்தவும்.
  • பருத்தி, சோயா பீன்ஸ், குங்குமப்பூ, தட்டைப் பயிறு, துவரம் பருப்பு அல்லது மற்ற பருப்பு வகைப் பயிர்களுடன் ஊடுபயிர் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க