உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு வண்டு

Leptinotarsa decemlineata

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • முட்டைப்புழுக்கள் கருநிற புள்ளிகளுடன் ஆரஞ்சு முதல் சிவப்பு நிறத்தில் இருக்கும், மேலும் அவை முழுமையாக வளரும்போது 1/2 அங்குல நீளம் இருக்கும்.
  • முட்டைப்புழுக்கள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இரண்டும் இலை ஓரங்களை உண்டு, தாவரத்தின் மொத்த இலையையும் உண்டுவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

கொலோரேடோ உருளைக்கிழங்கு வண்டின் முதிர்ந்த மற்றும் இளம் உயிர்கள் இலைகளின் ஓரங்களை உண்டு, இறுதியில் தண்டுகளை உதிர செய்கின்றன. வண்டுகளின் கருப்பு நிறக் கழிவுகளை சில நேரங்களில் காணலாம். எப்போதாவது கிழங்குகளும் இவற்றால் உண்ணப்படலாம். முதிர்ந்த உயிர்கள் மஞ்சள் – ஆரஞ்சு நிறத்தில், முட்டை வடிவில் இருக்கும். இவற்றின் குறிப்பிடத்தக்க அடையாளங்களானது வெள்ளை – பழுப்பு நிற முதுகு புறத்தில் பத்து கருப்பு வரிகள் காணப்படும். தலையில் முக்கோண வடிவில் கருப்பு புள்ளிகள் இருக்கும் மற்றும் மார்புப் பகுதிக்குள் ஒழுங்கற்ற அடர் அடையாளங்கள் காணப்படும். இளம் உயிர்களை அவற்றின் வண்டு போன்ற தோற்றம், சிவப்பு நிற தோல் மற்றும் இருபுறங்களிலும் கருப்பு நிற புள்ளிகள் இருப்பதைக் கொண்டு அறியலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாக்டீரியம் பூச்சிக்கொல்லி ஸ்பைனோசாடினை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சையளிக்கவும். பாசில்லஸ் துரிஞ்சியஞ்சியன்ஸிஸ் பாக்டீரியாக்கள் போன்றவை, வண்டுகளின் ஆரம்ப காலத்தில் இளம் உயிரிகளாக இருக்கும் காலகட்டங்களில் அவற்றிற்கு எதிராக போராடுபவை. துர்நாற்றம் கொண்ட பெரில்லஸ் பயோகுலடஸ் மற்றும் நூற்புழு பிரிஸ்டியான்கஸ் யுனிஃபார்மிஸ் போன்றவை கூட வண்டுகளை அழிக்கவல்லவை. ஒட்டுண்ணி பூச்சிகளான எடோவும் புட்லெரி மற்றும் பறக்கும் ஒட்டுண்ணி மையோபரஸ் டோரிபோரே போன்றவை கூட உருளைக் கிழங்கு வண்டுகளை கட்டுப்படுத்த உதவும். இதுபோன்ற பல மாற்று உயிரியியல் சிகிச்சை முறைகளும் சாத்தியமானவை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூச்சிக்கொல்லிகள் இந்த வண்டு இனத்திற்கு எதிராக வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியினால், பூச்சிகள் எதிர்ப்பு திறனை உருவாக்க கூடும். எண்ணிக்கையை கட்டுப்படுத்த எந்த கரைசல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை சோதிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சூரிய ஒளியினால் பாதிக்கப்படாத வகையில், மண்ணில் ஆழத்தில் இவை குளிர்காலம் முழுவதும் உயிர்வாழக் கூடியவை. வசந்த காலத்தில் இளம் செடிகளில் இருந்து ஊட்டம் பெற்று இவை வளரத் தொடங்கும். பெண் பூச்சிகள் சுமார் 20 முதல் 60 வரையிலான எண்ணிக்கையில், ஆரஞ்சு நிறத்தில், நீளமான முட்டை வடிவில் முட்டைகளை இலைகளுக்கு அடிப்புறத்தில் இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் இளம் உயிர்கள் இலைகளை தொடர்ச்சியான உணவாக எடுத்துக்கொள்கின்றன. அவற்றின் வளர்ச்சி முடிவில், இலைகளில் இருந்து கீழே விழுந்து நிலத்தில் உள்ள வளைகளின் வழியே அவை கட்டிய கோள வடிவ பகுதிக்குள் செல்கின்றன. அங்கு அவை மஞ்சள் நிற பூச்சியாக வளர்ச்சிகொள்கின்றன.


தடுப்பு முறைகள்

  • நெகிழ்திறன் கொண்ட தாவரங்களை பயிரிடவும்.
  • அதிகப்படியான இளம் உயிரிகளின் எண்ணிக்கையை குறைக்க குறிப்பிட்ட பருவத்திற்கு சிறிது முன்னரே பயிரிடுதலை மேற்கொள்ளவும்.
  • மஞ்சள் நிறத்தில் ஒட்டும் வகையிலான பொறிகளை வைத்து வண்டுகளை பிடித்து அழிக்கவும்.
  • 45% சாய்வு கொண்ட குழிகள் அல்லது பிளாஸ்டிக்/ இயற்கை தழைக்கூளங்களை நிலத்தில் பயன்படுத்தவும்.
  • செடிகளை அதிரச் செய்து அல்லது நாமாகவே கையினால் வண்டுகளைப் பிடித்து வெளியேற்றவும்.
  • துணையான பயிர்களை பயிரிடுவதன் மூலம் கிழங்குகளில் இருந்து வண்டுகள் ஊட்டம் பெறுவதைத் தவிர்க்க இயலும்.
  • கரும்பள்ளி வண்டு, கண்ணாடி இறக்கைப் பூச்சி மற்றும் முள் சிப்பாய் பூச்சி போன்ற நன்மை பயக்கும் பூச்சிகளை அதிகப்படுத்தி வண்டுகளை அழிக்கலாம்.
  • புரவலன் அல்லாத பயிர்களுடன் பயிர்சுழற்சி செய்யலாம்.
  • அறுவடைக்குப் பின்னர் நன்கு ஆழமாக உழுதல் வேண்டும்., பழைய பயிர்களின் எஞ்சிய பாகங்களை களத்தில் இருந்து நீக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க