திராட்சை

மஞ்சள் திராட்சைக் கொடி சிலந்தி

Eotetranychus carpini

சிலந்திப்பேன்

5 mins to read

சுருக்கமாக

  • ஒழுங்கற்ற வளர்ச்சி, உருமாற்றம் அல்லது ஏராளமான இலை மற்றும் பூ மொட்டுக்கள் வாடுதல் முதலியவை ஏற்படும்.
  • கட்டையான கணுவிடைப்பகுதியும் இவற்றால் ஏற்படும் தோற்றமாகும்.
  • இலை நரம்புகள் நெடுகிலும் சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும், அதனைத் தொடர்ந்து திசுக்களில் பச்சையசோகை மற்றும் சிதைவுகள் ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
திராட்சை
குழிப்பேரி

திராட்சை

அறிகுறிகள்

பருவ காலத்தின் ஆரம்பத்தில், மஞ்சள் திராட்சை தோட்ட சிலந்தியின் உண்ணும் சேதங்களானது, ஒழுங்கற்ற வளர்ச்சி உருமாற்றம் அல்லது ஏராளமான இலை மற்றும் பூ மொட்டுக்கள் உலர்ந்து போகுதல் முதலியவற்றை ஏற்படுத்தும். கட்டையான கணுவிடைப்பகுதியும் இவற்றால் ஏற்படும் தோற்றமாகும். வளர்ச்சியின் பிற்பகுதியில், இவற்றின் பாதிப்பு இலை நரம்புகள் நெடுகிலும் சிவப்பு அல்லது பழுப்பு நிறப்புள்ளிகளாக காணப்படும். சிலந்தியின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இந்த அறிகுறிகள் எஞ்சிய இலை பரப்புகளுக்கு பரவி, அதனைத் தொடர்ந்து திசுக்களில் பச்சைய சோகை மற்றும் சிதைவுகள் காணப்படும். இவை ஒளிச்சேர்க்கை விகிதங்களை குறைத்து, அதன் விளைவாக பழங்கள் மற்றும் பெர்ரிகள் பழுப்பதில் தாமதம் ஏற்படும், அவற்றின் சர்க்கரை அளவு குறையும் மற்றும் விளைச்சல் குறையும். சிலந்தியின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட, ஆரம்ப தொற்று குறிப்பாக தீங்கு விளைவிக்க கூடியது ஆகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இயோடெட்ரானிக்கஸ் கார்ப்பிணியின் எண்ணிக்கையை சில வேட்டையாடும் சிலந்தி இனங்களின் மூலம் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக காம்பிமோட்ரோமஸ் அபேரன்ஸ் என்னும் இயற்கையாக வேட்டையாடும் இனத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். இருப்பினும், பூச்சிகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் அதே இரசாயன சிகிச்சைகள் மூலமாகவும் இந்த இயற்கையாக வேட்டையாடும் பூச்சி இனங்கள் கொல்லப்படுகின்றன. சிறிய தாக்கும் வண்டுகள் அல்லது மலர் வண்டுகளின் (ஆன்டோகோரிடே) சில இனங்கள் இந்த சிலந்தியை உண்ணக்கூடியவை. எனவே இதுவும் இத்தகைய தொற்றை கட்டுப்படுத்தும் மற்றொரு வழிமுறையாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அகாரிசைடு என்பவற்றை இரண்டு முறை தெளிக்கலாம், முதலில் மொட்டு வெளிவரும் போது, இரண்டாவது முறை தளிர்கள் 10 செ.மீ நீளம் கொண்டிருக்கும் போது இதனை தெளிக்கலாம். அக்ரினாத்ரின், குளோபேன்டெஸீன், சைஹெக்சாட்டின், டைகோஃபோல், ஃபெனாஸாக்கின், ஃபென்புடடின்-ஆக்சைடு, ஹெக்ஸிதியாஜாக்ஸ், பைரிடபென் மற்றும் டெபூபென்பைரேட் ஆகியவை முக்கிய அகாரிசைடுகள் ஆகும். இந்த தயாரிப்புகள் காம்பிமோட்ரோமஸ் அபேரன்ஸ் என்னும் இயற்கை இறைப்பிடித்துண்ணியையும் பாதிக்கும். சில பூச்சிக்கொல்லிகள் சிற்றுண்ணிகளையும் பாதிக்கின்றன. கோடைகால பூச்சிகளின் எண்ணிக்கையை 12 நாட்களுக்கு 2 சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறி இயோடெட்ரானிக்கஸ் கார்ப்பிணி எனப்படும் மஞ்சள் நிற திராட்சைக் கொடி சிலந்தியால் ஏற்படுகிறது. இது திராட்சை அல்லது பீச் மரங்கள் போன்ற முக்கிய பயிர்களை பாதிக்கிறது. பெண் சிலந்தி நீளமான உடலையும், அவற்றின் நிறம் லேசானது முதல் எலுமிச்சை மஞ்சள் நிறம் வரை மாறுபடும். இவை கிளைகளின் மரப்பட்டையில் கூட்டமாக செயலற்ற நிலையில் இருக்கும். முதல் மொட்டுகள் தோன்றும் போது, அவை வெளிவந்து, இளம் இலைகளை சுமார் பத்து நாட்களுக்கு உண்ணும். பின்னர் அவை இலைகளின் கீழ்ப்பகுதியில் கோடுகளுடைய கோளவடிவ, பளிங்கு போன்ற முட்டைகள் இடும். இளம் சிலந்திகள் மெல்லிய வலைகளால் மூடப்பட்டு, பெரிய கொத்துக்களாக அங்கு காணப்படும். அவை இலைகளின் சாறுகளை உண்ணும். வெப்பநிலை மற்றும் இலை தொகுதியின் நிலையைப் பொறுத்து பெண் சிலந்தியின் வாழ்நாள் (12 முதல் 30 நாட்கள்) மற்றும் தலைமுறைகளின் எண்ணிக்கை (5 முதல் 6 வரை) இருக்கும். அவற்றின் வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 23° செல்சியஸ் ஆகும்..


தடுப்பு முறைகள்

  • மொட்டு வெளிவரும் நேரம் மற்றும் கோடைக் காலத்தில் நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா திராட்சை தோட்டங்களை கண்காணிக்கவும்.
  • சிலந்தியின் நன்மை பயக்கும் எதிரிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க