தக்காளி

தக்காளியில் மஞ்சள் இலைச் சுருட்டை வைரஸ் நோய்

TYLCV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் வெளிறிய ஓரங்கள் மேற்புறம் மற்றும் உட்புறம் சுருண்டிருக்கும்.
  • வளர்ச்சி குன்றும்.
  • கனிகளின் எண்ணிக்கை குறையும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

தக்காளி

அறிகுறிகள்

நாற்றுகளாக இருக்கும்போது, மஞ்சள் இலை சுருட்டை வைரஸ் நோய் தாக்கினால், இளம் இலைகள் மற்றும் தளிர்கள் ஆகியவற்றின் வளர்ச்சி மிகவும் மோசமாக பாதிக்கப்படும், இதன் விளைவாக புதர் போன்று பயிர் வளரும். முதிர்ந்த பயிர்களில், நோய் தாக்கத்தினால் அதிகப்படியான கிளைகள் உருவாதல், இலைகள் தடித்தல் மற்றும் சுருண்டு கொள்ளுதல், நரம்புகளுக்கு இடையேயான பச்சைய சோகை போன்றவை இலையின் கூர்முனைப் பகுதிகளில் தெளிவாகத் தென்படும். நோயின் பிந்தைய நிலையில், இவை தோல் போன்ற அமைப்பினைப் பெறும் மற்றும் அவற்றின் வெளிறிய ஓரங்கள் இலைகளின் மேற்புறம் மற்றும் உட்புறம் சுருண்டுகொள்ளும். பூக்கும் நிலைக்கு முன்னரே நோய் பாதிப்பு ஏற்பட்டால், கனிகளின் எண்ணிக்கை குறையும் ஆனால் குறிப்பிடும்படியான எவ்வித அறிகுறிகளும் அவற்றில் காணப்படாது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், மஞ்சள் இலை சுருட்டை நோய்க்கு தற்போது எங்களிடம் எவ்வித மாற்றுச் சிகிச்சை முறைகளும் இல்லை.வெள்ளைப் பேன்களின் எண்ணிக்கையினைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் வைரஸ் பரவலைக் குறைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

ஒருமுறை இந்த வைரசால் பாதிக்கப்பட்டால் அதன்பின்பு எவ்வித சிகிச்சையின் மூலமும் நோயினைத் தீர்க்க முடியாது. வெள்ளைப் பேன்களின் எண்ணிக்கையினைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் வைரஸ் பரவலைக் குறைக்கலாம். நாற்று நடும் நிலையில், பைரெத்ராய்ட்ஸ் குடும்பத்தைச் சார்ந்த பூச்சிக்கொல்லிகளை மண்ணில் நனைத்து அல்லது தெளித்து வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம். இருப்பினும், அவற்றின் அதிகப்படியான பயன்பாடு வெள்ளைப் பூச்சிகள் கூட்டத்தில் எதிர்ப்புத்திறனை உருவாக்கிவிடும்.

இது எதனால் ஏற்படுகிறது

மஞ்சள் இலை சுருட்டை வைரஸ் நோய் விதைகள் மூலமோ, இயந்திரங்களினாலோ பரவக்கூடியவை அல்ல. இவை பெமிசியா டபசியின் வெள்ளை ஈக்கள் மூலம் பரவுகின்றன. இந்த வெள்ளை ஈக்கள் பல பயிர்களின் அடியிலை மேற்பரப்பில் ஊட்டம் பெறுகின்றன மற்றும் இளம் பயிர்களால் கவரப்படுகின்றன. மொத்த பாதிப்பு சுழற்சியும் 24 மணி நேரத்திற்குள் நடந்துவிடும் மற்றும் இவை அதிக வெப்பத்துடன் கூடிய உலர்ந்த வானிலையில் விரைவாக நடைபெறும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு திறன் அல்லது சகிப்புத் தன்மை கொண்ட பயிர் வகைகளைப் பயன்படுத்தவும்.
  • வெள்ளை ஈக்களின் உச்சக்கட்ட படையெடுப்பைத் தடுக்க, குறித்த காலத்திற்கு முன்னதாகவே பயிரிடவும்.
  • பரங்கிக்காய், வெள்ளரிக்காய் போன்ற பாதிக்கப்படாத பயிர்களைக் கொண்டு ஊடுபயிரிடலை மேற்கொள்ளவும்.
  • விதைப்படுகைகளைப் பாதுகாக்க வலைகளைப் பயன்படுத்தவும் மற்றும் தாவரங்களை வெள்ளைப் பூச்சிகள் அடைவதைத் தடுக்கவும்.
  • தக்காளிக்கு அருகே மாற்றுப் புரவலன் தாவரங்கள் பயிரிடுவதைத் தவிர்க்கவும்.
  • விதைப் படுகைகள் அல்லது நிலத்தில் தழைக்கூளத்தினைப் பயன்படுத்தி வெள்ளை ஈக்களின் வாழ்க்கைச் சுழற்சியினைத் தடுக்கவும்.
  • ஒட்டும் தன்மை கொண்ட மஞ்சள் பிளாஸ்டிக் பொறிகளைப் பூச்சிகளை பிடிக்கப் பயன்படுத்தவும்.
  • களத்தினைத் தொடர்ச்சியாகக் கண்காணித்துப் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கைகளாலே எடுக்கவும் மற்றும் நிலத்திலிருந்து தூரத்தில் புதைக்கவும்.
  • நிலத்திற்குள் மற்றும் நிலத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள களைகளைக் கண்டறிந்து நீக்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் எஞ்சியவையுடன் சேர்த்து நிலத்தை ஆழமாக உழுது விடவும் அல்லது அவற்றை எரித்து விடவும்.
  • பாதிக்கப்படாத பயிர்களின் துணைகொண்டு பயிர்சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க