சோயாமொச்சை

பாசிப்பயிறு மஞ்சள் தேமல் வைரஸ்

MYMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • ஒழுங்கற்ற மஞ்சள்-பச்சை கலந்த புள்ளி அமைப்பு இலைகளில் காணப்படும் - மடிந்த தோற்றம்.
  • சிதைவுகள் பெரிதாகி, ஒன்றிணைந்து, கருத்த பழுப்பு நிறமாக மாறும்.
  • குறைவான, சிறிய காய்கள், சில நேரங்களில் மேற்புறம் சுருண்டுகொள்ளும்.
  • குன்றிய வளர்ச்சி.
  • விதையின் தரம் மற்றும் அளவு குறைதல்.


சோயாமொச்சை

அறிகுறிகள்

இளம் இலைகளில் பச்சை நிறமிழப்பு (வெளிறிய), கீழ்நோக்கி சுருண்டு கொள்ளும் அல்லது வெள்ளை தாள் போன்று ஆகிவிடும். முதிர்ந்த இலைகள் சிதறிய மஞ்சள் நிற புள்ளிகளுடன் காணப்படும். பின்னர் அவை ஒழுங்கற்ற வடிவத்தில் பச்சை மற்றும் மஞ்சள் திட்டுகளாக மாறும். பச்சைப் பகுதிகள் சிறிது உப்பி, இலைக்கு மடிப்புடைய தோற்றத்தை அளிக்கிறது. புள்ளிகள் பெரிதாகி, ஒன்றிணைந்து இறந்துவிடத் தொடங்கும் (நிறமிழப்பு). பாதிக்கப்பட்ட தாவரங்களின் வளர்ச்சி குன்றும். அவை குறைவான மலர்கள் மற்றும் காய்களை உற்பத்தி செய்யும். அவற்றின் காய்கள் சிறியதாகவும், மெல்லியதாகவும் காணப்படும் மற்றும் சில நேரங்களில் மேல்நோக்கி சுருண்டு கொள்ளும். அவையும் குறைவான மற்றும் சிறிய விதைகளைக் கொண்டிருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வைரஸ் நோய்களை கட்டுப்படுத்த எந்த உயிரியல் நடவடிக்கையும் எடுக்க முடியாது. இருப்பினும், வேப்ப எண்ணெய் போன்ற தாவர சாறுகள் வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, பாதிக்கப்பட்ட பயிர்களின் விளைச்சலை திறம்பட மேம்படுத்த உதவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சைபர்மெத்ரின், டெல்டாமெத்ரின் அல்லது டைமீதோயேட் ஆகியவற்றுடனான இலைவழி தெளிப்பான்கள் வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடும். நோய் பரப்பிகளை குறைக்க, எல்லைப் பயிர்களை (மக்காச்சோளம், சோளம் மற்றும் கம்பு) எண்டோசல்பான் கொண்டு சிகிச்சையளிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த வைரஸ் பெமிசியா டபாக்கி என்னும் வெள்ளை ஈக்களால் பரவுகிறது. விதைகளில் பரவ சாத்தியம் இல்லை. ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல நாடுகளில் இந்த நோய் ஏற்படுகிறது. இலைகளில் காணப்படும் மஞ்சள் திட்டுக்கள் குறிப்பிடத்தக்க அளவு தாவர உற்பத்தியை குறைக்கின்றன. சூடான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியன இந்த வைரஸ் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலையாகும். பாசிப்பயிறு மஞ்சள் தேமல் வைரஸால் ஏற்படும் நோய்தொற்று 100% வரை விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும். பயிறு மஞ்சள் தேமல் வைரஸ் பாசிப்பயிறை விட உளுந்தை அதிகம் பாதிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் நாட்டில் கிடைக்கப்பெறும் என்றால், நோய்எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • எல்லைப் பயிர்களாக உங்கள் வயல் முழுவதும் சோளம், மக்காச்சோளம் அல்லது கம்பு ஆகியவற்றை வளர்க்கவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை தொடர்ந்து சோதித்து, பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றவும்.
  • பூச்சிகளை கண்காணிக்க அல்லது அவற்றை மொத்தமாக பிடிக்க மஞ்சள்நிற ஒட்டும் பொறிகளை பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க