விதையவரை

அவரையின் பொதுவான தேமல் வைரஸ்

BCMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் வெளிர் மற்றும் அடர் பச்சை நிற தேமல் போன்ற தோற்றம்.
  • வளர்ந்த, மடிந்த அல்லது சிதைந்த இலைகள்.
  • கீழ்நோக்கி இலை சுருண்டுகொள்ளுதல்.
  • குன்றிய வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்


விதையவரை

அறிகுறிகள்

ஆரம்பத்தில், மூவிலைகளை உடைய இலைகள் சற்று வெளிர் நிறமாக மாறும். படிப்படியாக, இலை பரப்புகளில் (பச்சை மேல் பச்சை நிற தேமல்) வெளிர் மற்றும் அடர் பச்சை நிற தேமல் தோன்றும். சில நரம்புகள் அல்லது பாகங்களில் பச்சையசோகைக்கான அறிகுறிகள் தென்படும் (மஞ்சள் நிறமாகுதல்). நோய் அதிகரிக்கையில், இலைகளின் பாகங்கள் மடங்கிவிடும் அல்லது சிதைந்துவிடும். சுருண்ட அல்லது சுருட்டப்பட்ட இலைகள் தாமதமாக தோன்றும் பிற அறிகுறிகளாகும். ஆரம்ப வளர்ச்சிக் கட்டங்களில் பாதிக்கப்பட்ட தாவரங்கள் கடுமையான குன்றிய வளர்ச்சியுடன், குறைவான காய்களுடனும், ஒரு நெற்றுக்கு குறைவான விதைகளுடனும் உற்பத்தியற்றவையாக மாறலாம். சில எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகைகளில், வைரஸ் வேர்களை கருமையாக்குகிறது, இது 30 ° செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலையில் மட்டுமே காணப்படுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வைரஸுக்கு நேரடி சிகிச்சை சாத்தியமில்லை. நீர்த்த கனிம எண்ணெய்கள் அசுவினிகளால் வைரஸ் பரவுவதைக் குறைக்கும், ஆனால் அதிக செறிவுகளில் இந்த எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டால் அது தாவரங்களுக்கு நச்சுத்தன்மையுள்ளதாக மாறலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் தொற்றுநோய்களுக்கான வேதியியல் சிகிச்சை சாத்தியமில்லை. காரணி அசுவினிகளின் வேதியியல் கட்டுப்பாடு பெரும்பாலும் பயனற்றதாக இருக்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

நோய் பரவுவதன் முதன்மை ஆதாரம் பாதிக்கப்பட்ட விதைகள். பாதிக்கப்பட்ட மகரந்தம், காரணி பூச்சிகள் (பெரும்பாலும் அசுவினிகள்) அல்லது வயல் பணியின்போது தாவரங்களுக்கு ஏற்படும் இயந்திர காயம் மூலம் ஒரு தாவரத்திலிருந்து இன்னொரு தாவரத்திற்கு இரண்டாம் நிலை பரிமாற்றம் நடைபெறுகிறது. அறிகுறிகளும், விளைச்சலின் மீதான பாதிப்பும், தாவர வகை, சுற்றுச்சூழல் நிலைமைகள் (வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்) மற்றும் நோய்த்தொற்று ஏற்படும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்தது. நீள அவரை வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகத் தெரிகிறது, அதே நேரத்தில் சதுர அவரை மற்றும் சர அவரை ஆகியவை மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. வைரஸைச் சுமக்கும் விதைகளிலிருந்து வளர்க்கப்படும் தாவரங்களில் 100% வரை இழப்புகளை எதிர்பார்க்கலாம் (விதை மூலம் பரவும் தொற்று). அதன் பிறகு அசுவினிகளால் ஏற்படும் நோய்த்தொற்று பொதுவாக லேசான தீவிரம் கொண்டவை. 30 ° செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலையில் அறிகுறிகள் மோசமடைகின்றன.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து ஆரோக்கியமான விதைப்புப் பொருளைப் பயன்படுத்தவும்.
  • சாத்தியம் உள்ளபோதெல்லாம், நெகிழ்வுத்தன்மை உடைய வகைகளை பயன்படுத்தவும்.
  • அசுவினிகள் கவிகைக்குள் நுழைவதை தடுக்க, அடர்த்தியாக நடவு செய்யவும்.
  • அசுவினிகளின் உச்சக்கட்ட படையெடுப்பை தவிர்க்க சீக்கிரம் நடவு செய்யவும்.
  • முதல் அறிகுறிகள் காணப்படும்போது பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றவும்.
  • மற்ற அவரை உற்பத்தி தளங்களிலிருந்து அகன்ற அவரையை பயிரிடவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • அசுவினிகளை தடுக்க துணை பயிர்களை நடவு செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க