அரிசி

தூர் அழுகல் நோய்

Gibberella fujikuroi

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • நாற்றுகளைப் பாதிக்கும் தூர் அழுகல் நோய், பெரும்பாலும் நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட நாற்றுக்கள், வெளிறிய தோற்றத்துடன் வழக்கத்தினை விட உயரமான பயிராகவும், மெல்லியதாக மற்றும் உலர்ந்த இலைகளைக் கொண்டதாகவும் வளரும்.
  • பழுப்பு நிறப் புள்ளிகள் பாதிக்கப்பட்ட பயிர்களின் தண்டுகளில் உருவாகும்.
  • தண்டுகளின் மேற்புற கணுக்களில் இருந்து புதிய வேர்கள் வளரலாம்.
  • பாதிக்கப்பட்ட பயிர்கள் கதிர்களில் பாதி நிரப்பப்பட்ட தானியங்கள், மலட்டுத் தன்மை கொண்ட, அல்லது வெற்றுக் கதிர்கள் உருவாக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


அரிசி

அறிகுறிகள்

நாற்றுகளை பாதிக்கும் தூர் அழுகல் நோயாக தெரிந்தாலும் இவை பெரும்பாலும் நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் காணப்படும் நோயாகும். நோய்ப் பாதிப்பினை உருவாக்கும் பூஞ்சைகள் பயிர்களின் வேர் அல்லது மேல் பகுதியின் வழியே உள்நுழைந்து தண்டின் வழியே பயிர்களுக்குள் வளருகின்றன. இவை முதல் கட்ட நோய்த்தொற்றில் வாழ்ந்தால், நாற்றுக்கள் வழக்கத்திற்கு மாறாக வெளிறிய தோற்றத்துடன் உயரமான பயிர்களாகவும் (பெரும்பாலும் பல அங்குலங்கள் ) மெல்லியதாக மற்றும் உலர்ந்த இலைகளைக் கொண்டதாகவும், குறைந்த பக்கக் கன்றுகளை உடையதாகவும் வளரும். தண்டுகளின் உட்புறம் அழுகும் மற்றும் தண்டுகளின் மேற்புற கணுக்களில் இருந்து புதிய வேர்கள் வளரும். பழுப்பு நிறப் புள்ளிகள் பாதிக்கப்பட்ட பயிர்களின் தண்டுகளில் உருவாகும். பயிர்கள் முதிர்ச்சியடையும் நிலை வரை வாழ்ந்தால், அவை பாதிக்கப்பட்ட பயிர்களின் கதிர்களில் பாதி நிரப்பப்பட்ட தானியங்கள் , மலட்டுத் தன்மை கொண்ட, அல்லது வெற்றுத் தானியங்களை உருவாக்கும். அந்தத் தாவரங்களில், கொடியின் இலை அதன் உயர்ந்த மற்றும் அதிக கிடைமட்ட நோக்குடன் தெரிவிக்கக்கூடியதாக உள்ளது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்நோய்க்கு எதிராக எவ்வித உயிரியல் சிகிச்சை முறைகளும் இப்போது இல்லை. உப்புத் தண்ணீரைப் பயன்படுத்தி, விதைகளை மூழ்க வைத்து சிறிய எடை கொண்ட (பாதிக்கப்பட்ட) விதைகளை, ஆரோக்கியமான விதைகளிடம் இருந்து பிரித்தெடுக்கப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூஞ்சைக் கொல்லி கலவை திரவங்களான டிரைஃப்லுமைஸோல், ப்ரோபிகோனஸோல், ப்ரோக்லோராஸ் (தனித்து அல்லது திரம் இணைந்து) போன்றவற்றில் விதைகளைச் சுமார் ஐந்து மணி நேரம் மூழ்கவைத்தும் சிகிச்சையளிப்பது சிறப்பான பயனைத் தரும். சோடியம் ஹைபோக்ளோரைட் (ப்ளீச்) உடனான விதைச் சிகிச்சை இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகளைத் திறன்மிக்க வகையில் குறைக்கிறது. மேற்கூறியவற்றின் கலவைகளை தாவர நிலையில் வாரத்திற்கு இரு முறை தெளித்துவருவதன் மூலம் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

தூர் அழுகல் நோய் விதை வழியே பரவும் நோயாகும். பாதிக்கப்பட்ட விதைகளை (பூஞ்சை வித்துகளால் விதைகள் மூடப்பட்டிருக்கின்றன) பயன்படுத்துவதால்தான் இந்நோய் முக்கியமாகப் பரவுகிறது, இருப்பினும் நோய்க்காரணி பயிர் அல்லது மண்ணில் இருப்பதாலும் நோய் ஏற்படுகிறது. காற்று அல்லது நீரின் மூலம் பூஞ்சை வித்துக்கள் ஒரு பயிரில் இருந்து மற்றொரு பயிருக்குப் பரவுகின்றன. பண்ணை நடவடிக்கைகளின் போது பரவுகிறது, அறுவடை செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட தாவரங்கள் பூஞ்சை வித்துகளை ஆரோக்கியமான தாவரங்களுக்குப் பரவ அனுமதிக்கிறது, மற்றும் பூஞ்சை கொண்டிருக்கும் தண்ணீரில் ஊறவைத்தல் மூலமும் பரவுகிறது. உயர் வெப்பநிலைகளான 30 முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நோய் வளர ஏதுவான வெப்பநிலையாகும்.


தடுப்பு முறைகள்

  • சுத்தமான விதைகளைப் பயன்படுத்தி இந்நோய் ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவும்.
  • கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகைகளை உபயோகிக்கவும்.
  • நாற்றுகளைக் கண்காணித்து, சற்று வெளிறிய, வெளிறிய தோற்றம் கொண்ட நாற்றுகளை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • நைட்ரஜன் அதிகமுள்ள தயாரிப்புகள் மூலம் உரமளித்தலைத் தவிர்க்கவும்.
  • பயிரிடுதலுக்கு முன்பு மண்ணினை நன்றாக உழுது உட்புற மண்ணை புறஊதா வெளிச்சத்திற்கு உட்படுத்தவும்.
  • விதைத்தலுக்கு முன்னர் முந்தைய பயிர்களின் எஞ்சிய பகுதிகளை உழுது அழித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க