நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

சிட்ரஸ் சொறி நோய்

Elsinoe fawcettii

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் இருபுறங்களிலும் பாலாடை-மஞ்சள் நிறத்திலோ அல்லது பளீச்சென்ற நிறத்திலோ கொப்புளங்கள் காணப்படும்.
  • இந்தக் கொப்புளங்கள் பின்னர் வெல்வெட் போன்ற முகப்பைக் கொண்டு பழுப்பு நிறத்தில், ஒழுங்கற்ற, கூம்பு வடிவிலான சிதைவுகளாக உருவாகின்றன.
  • பாதிக்கப்பட்ட இலைகள் கரடு முரடான விளிம்புகளுடன் சிதைந்தோ, கசங்கியோ சுருக்கங்களுடனோ காணப்படும்.
  • மஞ்சள் சார்ந்த பழுப்பு நிறத்திலோ, சாம்பல் நிறத்திலோ அடர்த்தியாக நிரம்பிய மரு போன்ற சொறிகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

மர வகைகளையும் சுற்றுச்சூழல் நிலைமைகளையும் பொறுத்து, அறிகுறிகள் சற்றே வேறுபடுகின்றன. மிகச் சிறிய, நீரில் தோய்ந்த புள்ளிகள், வழக்கமாக இலைகளில் முதலில் தோன்றும். அவை பின்னர் இந்த இலைகளின் இருபுறங்களிலும் பாலாடை-மஞ்சள் நிறத்திலோ அல்லது பளிச்சென்ற நிறத்திலோ கொப்புளங்களாக உருவாகின்றன. நோய் முன்னேறும் போது, இந்தக் கொப்புளங்கள், இலைகளின் மென் தகட்டின் பெரும் பகுதியை மூடிவிடும் வகையில், வெல்வெட் போன்ற முகப்பைக் கொண்டு, பழுப்பு நிறத்தில், ஒழுங்கற்ற, கூம்பு வடிவிலான சிதைவுகளாக உருவாகின்றன. முதிர்ந்த சிதைவுகள் சொறிகளால் ஆன மேற்பரப்பைக் கொண்டு, விரிசல்களும் பிளவுகளும் நிறைந்து சொரசொரப்பாகத் தோற்றமளிக்கின்றன. பாதிக்கப்பட்ட இலைகள் கரடு முரடான விளிம்புகளுடன் சிதைந்தோ, கசங்கியோ சுருக்கங்களுடனோ காணப்படும். இளம் கிளைகள், மென்மையான தளிர்கள் மற்றும் தண்டுகளும் கூட அதே அறிகுறிகளைக் காட்டக்கூடும். குன்றிய அல்லது புதர் போன்ற வளர்ச்சி, இவை இரண்டும் பொதுவான அம்சங்கள் ஆகும். கடுமையான நோய் தொற்றுகளின் போது, இலை உதிர்வு அடிக்கடி ஏற்படுகிறது. பழங்களில், இந்த சொறிகள் சிறிது எழும்பிய, இளஞ்சிவப்பிலிருந்து வெளிர் பழுப்பு வரையான நிறத்தில் இருக்கும். அவை முதிர்ச்சியடைந்தவுடன், மஞ்சள் சார்ந்த பழுப்பு நிறத்திலோ, சாம்பல் நிறத்திலோ, அடர்த்தியாக நிரம்பிய மறுவைப் போன்ற சொறிகளாக உருவாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்தப் பூஞ்சைக்கு எதிராக எந்த உயிரியல் சிகிச்சையும் இல்லை. புதிய தொற்றுகள் மற்றும் பூஞ்சை பரப்பைத் தடுக்க செம்பை அடிப்படையாகக் கொண்ட சான்றளிக்கப்பட்ட கரிம பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் செம்பு நச்சுத்தன்மையுடையதாக ஆகிவிடும் என்பதால், கவனம் தேவை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். திரம், டைஃபெனோகோனசோல் மற்றும் குளோரோத்தலோனில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு பூஞ்சைக் கொல்லிகளை, பரவலாக நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க பயன்படுத்தலாம். முறையான பூஞ்சைக் கொல்லிகள் மற்றொரு வழியாகும். பூஞ்சைக் கொல்லிகளுக்கு எதிராக சகிப்புத் தன்மை கொண்ட நோய் காரணிகளின் வகைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் எல்ஸினோ ஃபாசெட்டி மற்றும் ஈ. ஆஸ்டிரேலிஸ் என்னும் பூஞ்சைகளினால் ஏற்படுகின்றன. இவை நாரத்தை மரங்களின் பல்வேறு வகைகளிலும் இதே போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. எலுமிச்சை, திராட்சை பழங்கள், மேன்டரின்கள் ஆகியவை, இவ்விரண்டாலும் பாதிக்கப் படக்கூடியவை. எல்ஸினோ ஃபாசெட்டி முக்கியமாகப் புளிப்பு ஆரஞ்சையும், சில இனிப்பு ஆரஞ்சு வகைகளையும் மட்டுமே பாதிக்கிறது. இதற்கு மாறாக, ஈ. ஆஸ்டிரேலிஸ் இனிப்பு ஆரஞ்சிலும், எலுமிச்சையிலும் சொறிகளை ஏற்படுத்துகிறது, ஆனால் அது புளிப்பு ஆரஞ்சை புரவலனாக ஏற்றுக்கொள்வது இல்லை. இலைகளிலும் பழங்களிலும் இளஞ்சிவப்பிலிருந்து பழுப்பு வரையிலான நிறத்தில், கூம்பு வடிவங்களுக்கு மேல் தோன்றும் மரு போன்ற அமைப்புகள், மழைப்பொழிவு, பனி, காற்று அல்லது மேல்நிலை நீர்ப்பாசனம் ஆகியவற்றால் பரவக்கூடும் வித்துகள் ஆகும். இரண்டு சிட்ரஸ் நோய்த்தொற்று காரணிகளுள், ஈ. ஃபாசெட்டி மிகவும் பரவலானது, ஆனால் ஈ. ஆஸ்டிரேலிஸ் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் இது பரவலாக வளர்க்கப்படும் சிட்ரஸ் இனங்களைத் தாக்குகிறது.


தடுப்பு முறைகள்

  • சில நாடுகளில் இருக்கக் கூடிய நோய்தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து பெற்ற நடவு பொருட்களை பயன்படுத்துங்கள்.
  • எதிர்ப்பு சக்தி கொண்ட வகைகள் கிடைத்தால், அதைத் தேர்வு செய்யவும்.
  • வெண்ணெய்ப் பழம், பப்பாளி போன்ற சிட்ரஸ் அல்லாத மரங்களை இடை இடையே பயிர் செய்யவும்.
  • வயல்களிலிருந்தும், சுற்று வட்டாரங்களிலிருந்தும் களைகளை அகற்றவும்.
  • பிற வயல்களுக்கோ அல்லது தோட்டங்களுக்கோ, நோயுற்றவை என்ற சந்தேகத்திற்குரிய மரங்களை இடம் மாற்றம் செய்ய வேண்டாம்.
  • மேல்நிலை பாசனம் கொண்டு நீர் பாய்ச்சுதல் வேண்டாம்.
  • பழைய கிளைகள், சுள்ளிகள் மற்றும் பழங்களை அகற்றி பழத்தோட்டத்தை தூய்மையாக வைத்திருங்கள்.
  • நுனிகளைக் கத்தரித்து விதானத்தில் காற்றின் சுழற்சியை அதிகரியுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க