பார்லிகோதுமை

ராமுலேரியா இலைப்புள்ளி நோய்

Ramularia collo-cygni

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பருவத்தின் பிற்பகுதியில் இலைப்பரப்புகள் மற்றும் இலை உறைகளில் பழுப்பு நிற செவ்வக புள்ளிகள் தோன்றும்.
  • நோய் ஏற்பட்ட பிந்தையக் கட்டங்களில், புள்ளிகள் ஒன்றிணைந்து, பெரும்பகுதிகள் அல்லது திசுக்கள் நசிவுறும்.
  • பச்சை இலைத் திசுக்களின் சேதம் முன்கூட்டியே சிதைவு மற்றும் மகசூல் இழப்புக்கு வழிவகுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
பார்லிகோதுமை

பார்லிகோதுமை

அறிகுறிகள்

பூஞ்சைத் தொற்று தாவர வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஏற்படலாம் ஆனால் முதல் அறிகுறிகள் பருவத்தின் பிற்பகுதியில் மட்டுமே தெரியும். நோயின் ஆரம்ப கட்டத்தில், சிறிய பழுப்பு நிற ஒழுங்கற்ற "மிளகு புள்ளிகள்" இலைப்பரப்பு அல்லது இலை உறை மீது தோன்றும். பின்னர், இந்தப் புள்ளிகள் பெரிதாகி, 1 முதல் 3 மிமீ அளவுள்ள செவ்வக, செம்பழுப்பு நிற சிதைந்த புள்ளிகளாக உருவாகும். புள்ளிகள் இலை நரம்புகளால் பிரிக்கப்பட்டு, இலைப்பரப்பின் இருபுறமும் தெரியும், மேலும் இவை பொதுவாக வெளிர் பழுப்பு அல்லது மஞ்சள் நிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருக்கும். நோயின் பிந்தைய கட்டங்களில், புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய அடர்நிற பகுதிகளை உருவாக்கலாம் மற்றும் இலையின் பெரும் பகுதிகளில் நசிவு ஏற்படலாம். இலை உறைகள் மற்றும் தூரிகை முடியிலும் அறிகுறிகள் தெரியும். பூதக்கண்ணாடியைப் பயன்படுத்திப் பார்த்தால், இலைகளின் அடிப்பகுதியில் பூஞ்சை வளர்ச்சியின் வெள்ளைக் கொத்துக்கள் தெரியும். இலை சேதமடைவதால் இலைகள் முன்கூட்டியே சிதைந்து விளைச்சல் இழப்பு ஏற்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், ராமுலேரியா கொலோ-சிக்னிக்கு எதிரான மாற்று சிகிச்சை எதுவும் எங்களுக்குத் தெரியாது. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் ஏதாவது உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து கேட்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். ட்ரையசோல் என்பதை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளுடன் கூடிய இலைத்திரள் தெளிப்புகள் தடுப்பு நடவடிக்கையாகவும், நோய் கண்டறியப்பட்டவுடன் அதனைத் தீர்க்கும் விருப்பமாகவும் பயன்படுத்தப்படலாம். தற்போது கிடைக்கும் விதை நேர்த்தி சிகிச்சைகள் பூஞ்சையின் மீது சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

ராமுலேரியா கொலோ-சிக்னி என்ற பூஞ்சையால் இந்த நோயின் அறிகுறிகள் ஏற்படுகின்றன, இப்பூஞ்சை விதைகள், தன்னார்வத் தாவரங்கள், பிற தானிய புரவலன்கள் அல்லது மண்ணில் உள்ள தாவர எச்சங்கள் ஆகியவற்றில் உயிர் வாழும். வித்துகள் காற்று மற்றும் மழை மூலம் பரவுகின்றன. தாவர வளர்ச்சியின் எந்த நிலையிலும் இந்த நோயின் தொற்று ஏற்படலாம் என்றாலும், பருவத்தின் பிற்பகுதியில், இனப்பெருக்க வளர்ச்சிக்கு மாறும்போது மட்டுமே இத்தகைய அறிகுறிகள் தோன்றும். பூஞ்சை இலைகளில் உள்ள இயற்கையான துளைகள் மூலம் தாவரத்திற்குள் நுழைந்து உட்புறத் திசுக்களை காலனித்துவப்படுத்தும், இது தாவரத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மையை உருவாக்கும். பூஞ்சை முளைப்பதற்கும் வளர்வதற்கும் இலையின் மேற்பரப்பில் ஈரப்பதம் தேவை (மழை அல்லது பனிக்குப் பிறகு இலைகளில் காணப்படும் ஈரப்பதம்). ஈரப்பதமான வானிலை அல்லது பனியுடன் கூடிய சூடான நாட்கள் பூஞ்சை வளர்ச்சி மற்றும் தொற்று வீதத்தை அதிகரிக்கும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்களிலிருந்து அல்லது சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து பெற்ற விதைகளைப் பயன்படுத்தவும்.
  • நிலையான மற்றும் எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை வளர்க்கவும்.
  • குறைந்த பயிர் அடர்த்தியை உறுதி செய்யவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் எதுவும் தென்படுகிறதா என வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • புரவலன் அல்லாத தாவரங்களைக் கொண்டு பயிர் சுழற்சியை நடைமுறைப்படுத்தவும் மற்றும் பார்லி, ஓட்ஸ் அல்லது கம்பு சாகுபடி செய்வதைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பின் பயிர்த்தாள்களை அகற்றி அழித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க