கரும்பு

சிவப்பு அழுகல் நோய்

Glomerella tucumanensis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • தண்டுகளில் வெவ்வேறு அளவுகளில் சிவப்பு முதல் பழுப்பு நிறக் கொப்புளங்கள் காணப்படும்.
  • வெள்ளை நிற ஓரங்களுக்குள் சிவப்பு நிற அழுகிய பகுதிகள் காணப்படும்.
  • இலைகளின் மீது சிவப்பு நிற நீள்வட்ட வடிவ புள்ளிகள், குறிப்பாக மைய நரம்புகளில் காணப்படும்.
  • சிவப்பு, பழுப்பு அல்லது சாம்பல் நிறமாற்றம் மற்றும் புளித்த வாடை போன்ற வடிவில் தானியங்கள் அழுகும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட தண்டுகள் மந்தமான நிறத்தையும், அதன் மேற்பரப்பில் பெரிய சிவப்புக் கொப்புளங்களையும் கொண்டிருக்கும், மேலும் பயிரின் வகையைப் பொறுத்து அதிக அல்லது குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். தண்டினை நீளமாக வெட்டினால் சிவப்பு நிற அழுகிய பகுதி திசுக்களிலோ அல்லது வெள்ளை நிறத் திசுக்களின் ஓரங்களிலோ காணப்படும். எதிர்ப்புத் திறன் கொண்ட தாவரங்களில், சிவப்பு நிற, நோயுற்ற பகுதிகள் பெரும்பாலும் கணுவிடைப்பகுதிகளில் காணப்படும். நோய் அதிகரிக்கையில், ஓரங்களுக்குள் குழிகள் உருவாகி, கடினமான இழைக் கொத்துக்களும் காணப்படும். இலைகள் வாடி, சுருங்கிவிடும். தாவரங்களில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும், பாதகமான வானிலை நிலைமைகளில் தண்டுகள் எளிதாக உடையக்கூடும். இலைகளில், சிறிய சிவப்பு நிற நீள்வட்ட அல்லது நீளமான காயங்கள் மையநரம்பிலும், சில நேரங்களில் அதன் முழு நீளத்திற்கும் ஏற்பட ஆரம்பிக்கும். உறைகளில் சிவப்பு நிறத் திட்டுக்களும், இலைப் பரப்புகளில் அவ்வப்போது சிறு கரும் புள்ளிகளும் காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விதைகளில் உள்ள நோய்க்கிருமியை அழித்து, சிவப்பு அழுகல் நோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த, சூடான நீர் சிகிச்சை (உதாரணமாக 2 மணி நேரம் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்) பயன்படுத்தப்படுகிறது. விதைகளுக்கு சிகிச்சை அளிக்க, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுள் கேட்டோமியம் மற்றும் டிரைக்கோடெர்மா இனத்தின் பூஞ்சைகளும் மற்றும் சூடோமோனாஸ் பாக்டீரியாவின் சில இனங்களும் அடங்கும். இந்தக் கரைசல்களை அடிப்படையாகக் கொண்ட இலைத்திரள் தெளிப்பான்கள் நோய் பரவுவதைத் திறன்மிக்க வகையில் குறைக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நோய்க்கிருமியை அழிக்க 50-54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 2 மணி நேரத்திற்கு சூடான நீரை பூஞ்சைக் கொல்லிகளுடன் கலந்து விதைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் (உதாரணமாக திரம்). வயலில் இரசாயன சிகிச்சை மேற்கொள்வது பயனுள்ளதாக இல்லை மற்றும் அவை பரிந்துரைக்கப்படக்கூடாது.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது குளோமெரெல்லா டுக்குமானென்சிஸ் பூஞ்சைகளின் காரணமாக ஏற்படுகிறது, இது மண்ணில் குறுகிய காலத்திற்கு (மாதங்கள்) மட்டுமே வாழக்கூடியது. இது மண் மூலம் பரவும் நோய்க்கிருமி இல்லையென்றாலும், பயிர்க் குப்பைகளில் இருந்து வித்துக்கள் மண்ணுக்குள் பரவி, சமீபமாக நடவு செய்யப்பட்ட விதைகள் அல்லது நாற்றுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். அதன் பிறகு, பாதிக்கப்பட்டத் தாவரங்களின் மையநரம்பிலோ அல்லது தண்டுகளிலோ ஏற்பட்ட நோய்த்தொற்று, வித்துக்கள் மூலம், காற்று, மழை, கடினமான பனி, நீர்ப்பாசன நீர் ஆகியவற்றின் வழியாகப் பரவுகிறது. குளிர்ந்த, ஈரப்பதமான வானிலை, மண்ணின் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் ஒற்றைப்பயிர் முறை ஆகியவை நோய்க்கு சாதகமானவை. வறட்சியும் தாவரத்தின் நோய் பாதிப்பை அதிகரிக்கிறது. கரும்பைத் தவிர, பூஞ்சையானது மக்காச்சோளம் மற்றும் சோளம் போன்ற சிறிய புரவலன்களையும் பாதிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • உங்களுடைய பகுதிக்குப் பொருத்தமாக இருந்தால், எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்யவும்.
  • சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான விதைகளையும், நாற்றுகளையும் பயன்படுத்தவும்.
  • நோய் இல்லாத வயல்களில் இருந்து தாவரப் பொருட்களைப் பெறவும்.
  • பருவத்தின் போது மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த வெப்பநிலையைத் தவிர்க்க விதைப்பு நேரத்தை மாற்றவும்.
  • வயலைத் தொடர்ந்து கண்காணித்து, பாதிக்கப்பட்டத் தாவரங்கள் அல்லது குவியல்களை அப்புறப்படுத்தவும்.
  • நோயுற்ற பயிர்களில் இருந்து புதிய தளிர்கள் வளர்வதைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பிறகு, வயல்களில் இருந்து ஏதேனும் தாவரக் குப்பைகளை அகற்றி, எரித்து விடவும்.
  • மாற்றாக, மண்ணில் உள்ள பூஞ்சைப் பொருட்களை வெயிலில் வெளிப்படுத்த நிலத்தை பல முறை நன்கு உழவும்.
  • 2-3 ஆண்டுகளுக்கு எளிதில் பாதிக்காத பயிர்களைக் கொண்டு நல்ல பயிர் சுழற்சிக்குத் திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க